Tuesday, December 21, 2010

2010: சிறந்த 10 படங்கள்:

2010: நான் பார்த்ததில், எனக்கு பிடித்த சிறந்த 10 படங்கள்:
*********************************************************


1) நந்தலாலா - மிஷ்கினின் ஆக்கம் மற்றும் இளையராஜா எனும் ஹீரோயிசம். அன்பினை வித்தியாசமாக வெளிப்படுத்தியதற்காக....



2) இன்செப்ஷன்(Inception) - கனவு தொழிற்சாலை. மாஸ்டர்பீஸ்.படம் பார்த்த போது சில நேரம் நானும் கனவு காண ஆரம்பித்தேன்.நான் அனுபவித்த சில கனவுகளும் இருந்தன...(௨.ம் - நாற்காலியில் இருந்து விழும் காட்சி). படம் பார்த்த போது நிறைய காட்சிகளை உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. விக்கிபீடியா மற்றும் வலைபதிவர்கள் உதவியுடன் புரிந்து கொண்டலில் அவ்ளோ சந்தோசம் :-)




3) களவாணி - இது ஒரு பீல் குட் மூவி. அவ்வளவு சந்தோசம் இந்த படம் பார்த்தவுடன்.கதை இன்றி திரைக்கதையால் ரசிக்க வைக்க ஒரு உதாரணம்.



4) எந்திரன் - இது ஒரு ஷங்கர் படம். தலைவரை ரொம்ப நாளைக்கு பிறகு கொஞ்சம் நடிக்க வைத்ததற்கு ஷங்கருக்கு ஒரு ஷொட்டு. ரஹ்மான்,ஐஸ்,கிராபிக்ஸ் என ஒரு மகா தாண்டவம்.

5) Unstoppable - சில லாஜிக் மீறல் இருந்தாலும் சீட் நுனியில் உக்கார்ந்து ரசிக்க வைத்த படம். வாழ்க்கையை உணர வைத்த படம்.

6) மைனா - முதலில் அனைவரும் நன்றாக நடித்து இருந்தனர். மைனாவின் கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி. போக போக தெரியும். அற்புதமான திரைக்கதை, பசுமையான கேமரா. நல்ல முடிவாக இருந்து இருந்தால், களவாணி போல் இதுவும் மனதில் நிற்கும் படமாக இருந்து இருக்கும்.

7) விண்ணை தாண்டி வருவாயா - சிம்புவை நடிக்க வைத்த, திரிஷா இவ்ளோ அழகா? என எண்ண வைத்த , ரஹ்மானிடம் கைகோர்த்த - கௌதமிற்கு ஒரு பூங்கொத்து.

8) பாஸ் என்கிற பாஸ்கரன் - ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸா காமெடி பண்ணி எல்லோரையும் மகிழ வைத்த மற்றும் ஒரு நல்ல படம்.

9) மதராச பட்டிணம் - படம் பல படங்களின் கலவை என்றாலும் கலையும், திரைக்கதையும் நம்மை நாற்பதுகளுக்கு இழுத்து சென்றது மறுக்க முடியாத, மறக்க முடியாத உண்மை.

10) அங்காடி தெரு - நாம் பார்த்த ஒரு கடை தெருவின் அவல நிலையை ஒரு காதல் மூலமாக சொன்ன வசந்த பாலனுக்கு ஒரு வந்தனம். அந்த பெண்ணின் காலை உடைக்காமலே பாசிட்டிவாக முடித்து இருக்கலாம்.

பின் குறிப்பு: 8 தமிழ் படங்களில் 5 படங்கள் குடும்ப படங்கள்(1 - மாறன், 4 -ஸ்டாலின்)

Friday, December 10, 2010

திரும்பி பார்க்கிறேன்


சச்சின பத்தி ஒரு கட்டுரை படிக்கும் போது பத்து வருடம் பின்னோக்கி சென்றது என் மனசு... இது நாங்க பத்தாவது படித்த போது நடந்த ஒரு சம்பவம்...எங்க ஊர்ல ஒவ்வொரு நடிகருக்கும் பிறந்த நாள் வரும் போது பெருசா ஒலிபெருக்கி வச்சு ஊரே அலறும்படி
ரெண்டு நாளைக்கு ரசிகர்கள் கொண்டாடுவாங்க....அப்போ சச்சின் பயங்கர பாப்புலர்...எங்களுக்கு சச்சினா உசிர் ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி மாதிரி....வெறித்தனமா இருப்போம்...ஏப்ரல் 24 சச்சின் பிறந்த நாள் வந்தது....எங்களுக்கு ஸ்கூல் போறதுக்கு குடுக்கிற காசெல்லாம் செத்து வச்சு நாங்க நண்பர்கள் எல்லாம் சேந்து அதே பாணியில் கொண்டாட முடிவு பண்ணினோம்...பணம் சேரல...பிறந்தநாள் நெருங்கி வந்துச்சு...
என்ன பண்றதுன்னு தெரில...கிரிக்கெட் வெளையாட வர்ற பெரிய அண்ணன்கள்கிட்ட கொஞ்சம் வாங்கினோம்...அப்பயும் சேரல,...வீட்ல உள்ள பழைய பேப்பர், உடஞ்ச பத்திரங்கள் எல்லாத்தையும் போட்டு கொஞ்சம் காசு செத்தோம்...ஒரு முப்பது ரூபா கம்மி...அப்போ முப்பது ரூபா ரொம்ப அதிகம் ஸ்கூல் போற பசங்களுக்கு...கிரிக்கெட் கிரௌண்ட் ல உள்ள முள் செடிகளை வெட்டி விறகா செத்து வித்துட்டோம்.....ரொம்ப சந்தோசம்...சச்சின் பிறந்த நாள் வந்துச்சு...ஓ சச்சின் வந்தாரய்யா பாட்டு அப்போ ரொம்ப பேமஸ்...எங்க வீட்டுக்கு பக்கத்துல்ல மெகா சைஸ் ஸ்பீக்கர், லவுட் ஸ்பீக்கர் வச்சு ரெண்டு நாள் ஒரே கொண்டாட்டம்...இனிப்பு பொங்கல் வைக்க முடில...ஒரு ரூபா சாக்லேட் வாங்கி நெறைய பேருக்கு குடுத்தோம்...சச்சின் பத்தி மைக் ல ஒரே புகழ் பாட்டுத்தான் என் நண்பர்கள்...என்னால் முழுமையா கொண்டாட முடில....சின்னம்மை வந்து வீட்டுக்குள்ள படுக்க வேண்டிதா போயிருச்சு...இருந்தாலும் நெனச்சத சாதிச்ச சந்தோசம்.....இது மாதிரி நெறைய உசிர்ங்க அவர்க்காக தவம் இருக்கிறாங்க...அதனால்தான் இன்னும் அவர் இன்னும் அசைக்க முடியாத சக்தியா இருக்கிறார்னு இப்போ நெனச்சுகிட்டேன்..

சந்தோஷ கண்ணீரே...

திரும்பி பார்க்கிறேன்



இன்னிக்கு ஒரு நூறு....அம்பதாவது நூறுக்கு இன்னும் ரெண்டுதான் பாக்கி...அவர் 200 ரன் அடிச்ச அந்த நாள கொஞ்சம் திரும்பி பாத்தேன்...அது ஒரு புதன் கிழமை..நல்ல விண்டர் டே. காலைல எழுந்தவுடனே ஸ்கோர் பாத்தேன்...140 பக்கம் இருந்தார்...அப்புறம் வீட்ட விட்டு ஆபீஸ் கெளம்பும் போது பாத்தேன் ஒரு 170 அடிச்சு இருந்தார் ...ஒருக்கா மனசுக்குள்ள வேண்டிகிட்டேன் இன்னிக்கு சாத்தியபடனும்னு...பஸ்ல போகும்போது ஐ-போன் ல தான் ஸ்கோர் பாத்துக்கிட்டே போனோம்...அந்த 200 அடிச்ச தருணம் வந்த போது கிரிக் இன்போ வ ரெப்ரெஷ் பண்ணி பண்ணி சைட்டே ஹாங் ஆச்சு...ஒரே படபடப்பு....குளிர்லயும் வேர்த்தது.....அடிச்சிட்டார் அப்டின்னு டாக்டர் கார்த்தி சொல்லவும் ஒரே குதூகலம். பஸ்ல எல்லோருக்கும் கை கொடுத்து கொண்டாடினோம்.....கண்களில் ஒரு ஓரம் பனித்தது.....அழகான தருணம் அது......


சகோதரிக்கு ஒரு வாழ்த்து மடல்...


நி(கி)லா விடு தூது...

வடிவத்தை பார்த்தால் ஒரு வட்டம் தான்...
நிறத்தை பார்த்தால் ஒரு வெள்ளை தான்...
சூரிய வெளிச்சத்தில் இது ஒரு அற்பம் தான்...
கவிஞர்களுக்கு ஒரு காதல் பாடு பொருள் தான்...
விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆராய்ச்சி கூடம் தான்....
ஆனால்...
நமக்கு மட்டும் அது ஒரு உயிருள்ள இணையம்.

இன்டர்நெட் இருந்தால் என்ன? மொபைல் வந்தால் என்ன?
செயற்கை கோள் வேகம் என்ன?
எத்தனை இருந்தும்,
நான் எண்ணியவற்றை அன்புடனும் பாசத்துடனும்
என் தமக்கையுடன் சேர்ப்பது நிலா மட்டுமே...

'நிலா நிலா ஓடி வா' முதல்
'வா வா நிலவை புடிச்சி தரவா' வரை எவ்வளவோ நிலா பாடல்கள்...இவையெல்லாம்
நமக்கு உதவும் நிலவை வாழ்த்திப் பாராட்டி
கவிக்கோக்கள் எழுதிய நன்றி மடல்கள்..

கால சுழற்சியினால் தான்
தேய் பிறையோ வளர் பிறையோ...
ஆனால் என்றுமே நிலா நீ ஒன்றுதான்...
காலம் மாறினாலும், கரைகள் தூரமானாலும்
உன் துணையுடன் உரையாடுவோம்...

முழு பௌர்ணமி நாளில்..
ஒருவருக்கொருவர்
நலம் விசாரிக்க ...
நன்றி கூற....
சண்டை இட்டு கொள்ள....
சமாதானம் பேச...
சந்திரன் விடுகிறேன் தூது
என் தங்கைக்காக...

இனிய சகோதர சகோதரிகள் தினம்

- ந.விஜயசெல்வம்





மூளை : மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள முடிச்சு


மூளை...
************
உடம்பில் உள்ள உன்னத படைப்பான மூளையைப் பற்றி காரில் தனியாக I91 நெடுஞ்சாலையில் யோசித்து போய்கொண்டு இருந்தேன். என் தங்கை சொன்னது சரியாகத்தான் உள்ளது...
" டேய்...கார்ல போகும்போது எப்பவும் ஜாக்கிரதையா போ....பேசிகிட்டே,பாராக்கு பாத்துக்கிட்டே போகாத...உன்னையும் அறியாமலே உன் கண்ணும் காலும் மூளையும் தானாகவே முன்னாடி போகும் வண்டிய பாத்து பேசிக்கொள்ளும்...இது எல்லா டிரைவர்ஸ்க்கும் காமன் டா" அப்டின்னு சொன்னா...அது உண்மைதான்...கொஞ்சம் எக்ஸ்பீரியென்ஸ் வந்துட்டா, நம்மை அறியாமலே கார் ஓடுகிறது..ஓட்டப்படுகிறது....மூளை, கண்ணுக்கும் காலுக்கும் செய்திகளை ஒரு நொடியின் மில்லியனின் ஒரு பங்கு நேரத்தில் விரைவாக அனுப்புகிறது. அதே நேரத்தில், நமது காதை வைத்து இசையை ரசிக்க வைக்கிறது....இதயத்தையும் நம் நினைவுகளையும் பாடல் வரிகள் மூலமாக வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு செல்கிறது...வாய் ஏதோ முணுமுணுக்கிறது...நமது கை, கடிகார திசை, கடிகார எதிர் திசையில் சுழல்கிறது....வலது ஆட்காட்டி விரல் அவ்வப்போது அடிமூக்கிற்கும் மேலுதட்டுக்கும் இடையே கோலம் போடுகிறது...கார் போக வேண்டிய திசையில் பயணிக்கிறது" மூளை இல்லாதவன் ஏதோ கிறுக்குன மாதிரி இருக்கிறதா நீங்க நெனைச்சா உடனே ஓட்டுனர் உரிமம் பெற்று உங்கள் மூளையை பரிசோதனைக்கு உட்படுத்தலாம்..


tamil 3 Idiots: My Choice...

Here are my star cast selection for Tamil 3 idiots(Rascal)..Shankarji...consider this option also...

If Vijay is not the Hero, then my choices would be...

Surya - Amir Role

Arya - Maddy Role

Jiva - Sharman Role

Delhi Kumar or Nasser - Boman Irani Role

Santhanam - Chatur Ramalingam

Samantha(1st choice) or Kaajal - Kareena Role

Millimeter - Pakkoda from Pasanga

Replace Surya with Vijay as it is already finalized....Vijay'ah vachu intha padatha nenachu pakka mudila....

HoZ is my selection??

The sample of movie will be like this if Vijay acts...

எனக்கு பிடித்த படங்கள்: 12 Angry Men(1957)

விவாதம் அப்படின்னா என்ன? அது எப்படி இருக்க வேண்டும்ணு தெரியணுமா? இந்தப்படத்தைப் பாருங்க. 96 நிமிட படத்துல, தொடர்ந்து 88 நிமிடம் ஒரு கோர்ட்டில் இருக்கற ஒரு அறையில் மட்டும். மொத்தம் 12 பேர் மட்டும் அந்த அறையில். ஒரு கொலை கேஸ் பத்தி விவாதிக்கறாங்க.. விவாதிக்கறாங்க.. விவாதிச்சுட்டே இருக்கறாங்க.. ஆனா, ரொம்ப subtitle படிக்கற மாதிரி இருக்கும்ணு நினைச்சுடாதீங்க. எளிமையான வசனங்கள். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இழுத்துச்செல்லும் படம்.

கதை என்ன? ஒரு 18 வயசுப்பையன் அவனோட அப்பாவையே கொன்னுட்டான்னு, கோர்ட்ல நிறுத்தி இருக்காங்க. நம்ம ஊர்லன்னா நீதிபதியே விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடுவாரு. ஆனா, அந்த ஊர்ல மக்கள் ஒவ்வொருத்தரும் வருஷத்துக்கு ஒரு தடவை கோர்ட்ல போயி, ஏதாவது ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்லணும். ஓட்டு போடற மாதிரி அதுவும் ஒரு கடமை. அதுக்கு ஆஃபீஸுல லீவு கூட குடுப்பாங்க. போக முடியாதுன்னா அபராதம் கட்டணும். சரி.. தனியா நாம் மட்டும் போயி ஏதாவது ஒரு தீர்ப்பு சொல்லிட முடியுமா? அதுனால, ஒரே வழக்குக்கு நிறைய பேரைக் கூப்பிடுவாங்க. நீதிபதி அவங்ககிட்ட வழக்கோட எல்லா விவரங்களையும் சொல்லுவார். அப்பறம் அவங்களை ஒரு அறையில தனியா விவாதிச்சு முடிவு எடுக்க சொல்லுவாங்க. ஆனா, எல்லாரும் ஒருமித்த தீர்ப்பை சொல்லணும். அதுவரை விவாதம் தொடரும்.


இந்தப்படத்துல அதுமாதிரி 12 பேரைக் கூப்பிடறாங்க. அவங்களுக்குள் யாரும் யாருக்கும் அறிமுகமானவங்க இல்ல. குற்றவாளியையும் இதுக்கு முன்னாடி தெரியாது. நீதிபதி சொல்லற ஆதாரங்களையும், குற்றவாளியோட வாக்குமூலத்தையும் கேட்டபின் ஒரு அறைக்கு 12 பேரை மட்டும் அனுப்பி வைக்கறாங்க. அவங்க முடிவு எடுக்க வேண்டியதுதான். 12 பேருல, 11 பேர் அந்தப்பையன்தான் குற்றவாளின்னு தீர்மானமா இருக்காங்க. ஒருத்தர் மட்டும் சாட்சிகள் பத்தாது, அதனால அந்தப்பையன் நிரபராதியா இருக்கலாம்னு சொல்றார். (அதாவது he has not done anything wrong legally அப்படிங்கறாரு – நன்றி:நித்தி). அதனால அவர் தன்னோட தீர்ப்பை மாத்தற வரையிலோ, இல்ல மீதி 11 பேரும் அவங்க தீர்ப்பை மாத்தற வரைக்குமோ அந்த அறையிலேயே இருந்து ஒருத்தரை ஒருத்தர் மாத்த முயற்சி செய்ய வேண்டியதுதான். இதெல்லாம் 10 நிமிடக்கதை.
இதுக்கப்பறம் என்ன பேசறாங்க அப்படிங்கறதுதான் படம்.


சரி.. 1948-ல் வந்த Rope படத்துலயே ஒரே வீட்டுக்குள்ளேயே 8 பேரை மட்டும் வச்சு படம் எடுத்துட்டாங்களே.. அதுக்கப்பறம் 10 வருஷம் கழிச்சு வந்த இந்தப்படத்துல அப்படி என்ன இருக்கு?
முதல் விஷயம் - கதாபாத்திரங்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். சாது, கோபக்காரர், அடிக்கடி கருத்து மாறுகிறவர், பிடிவாதமாக கருத்தை நம்பறவர், கசப்பான சொந்த அனுபவங்களால் முடிவெடுப்பவர் என சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கும் கதாபத்திரங்கள். 10 பேரு டீக்கடையில உட்கார்ந்துகிட்டு சூடான ஒரு விஷயத்தைப் பேசினா எப்படி இருக்குமோ அதை அப்படியே காட்டி இருக்காங்க.
இரண்டாவது விஷயம் - வசனம். முதல்வன் படத்துல அர்ஜுனும் ரகுவரனும் இன்டர்வியூ காட்சில பேசுவாங்களே. அந்த அஞ்சு நிமிஷத்துக்கே அசந்துட்டீங்கன்னா, இங்க 90 நிமிஷமும் அப்படித்தான். இயல்பான விறுவிறுப்பான வசனங்கள்.
மூன்றாவது – ஒவ்வொருவரும் மனம் மாறும் விதம். ஒவ்வொருவரையும் அவங்க கருத்து தப்புன்னு உணர வைப்பதையும், ஒரு விஷயத்தை எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் காண்கிறார்கள் என்பதையும் அப்படியே திரையில் கொண்டு வந்திருக்காங்க. (இந்தப்படம் வந்து 53 வருஷம் கழிச்சு தமிழில போன மாசம் வந்த ஒரு படத்தைப் பார்த்தேன். மூனு ஹீரோயின். எப்படித்தான் க்ளைமாக்ஸுல இப்படி திடீர்னு குணம் மாறுகிறாங்களோ.. அது டைரக்டருக்கே வெளிச்சம்)
AFI, IMDB மாதிரி சிறந்த திரைப்பட வரிசைகளில் முதல் 10 இடத்தில் உள்ளது!! மொத்தப்படமும் உங்களை நிச்சயம் இருக்கையில் கட்டிப்போடும்

(Thanks JAI for the Critics: http://worldmoviesintamil.blogspot.com/2010_03_01_archive.html


Sep 5: Teachers Day: My Note...

Mary Esthar, Stella, Mary Sellathai, David, Irin, Ebenezer, Seeni Amma, Rajeswari, Amutha, Pathrakaali, Valli,Subramani,Vaitheeswaran,Selvaraani,Kalaivani,Maasanam,Somu,Lakshmi,Thamil ayya Tamil chelvan, Arumugam, PT Teacher, Master Marimuthu, Sivaguru Master, Rengamani,Sakthivel,Murugan,Amsa Kalyaani, Rajeswari, Lakshmi Shanmugam, Manivannan, PalaniGuru, Alagu, Thilagavathi, Celoshia, Rajaamani, Suganthi, Prasanna Jeyanthi, Ramamoothy, Vaikundam, Sabapathy,Mahendran,Rama,Kayalvizhi,Bhuvaneswari....." ..I could not remember all....But, BIG THANKS to ALL my Teachers who are also reason to pave my path.

MY benZ...

Whenever I sit in my driver seat, I am dreaming that I will surely see her couple of times before reaching the office...I am thinking the same when I am returning from office to Home...I am always seeing her as I think/dream but in different different color. She looks great in tan. Very good in white and black and always good in other colors. I always forget myself whenever I see her and always go behind her even if she goes slowly and I used to it. She never said don't follow me. Whenever I cross her, 1000W bulb is lightening in my heart and I want to go with her at least once. I hope, that will happen soon. I am praying for her. She is coming in different different classes and she is High class to me. She always holds three arrows in her round bindi in her forehead. She is awesome and fantabulous. I treat her as my Z and Her Name is Mercedes BenZ.


எனக்கு பிடித்த படங்கள்: Its a Wonderful Life(1946)

Its a Wonderful Life:(1946)

First of all thanks to Netflix for helping me to watch this wonderful movie....James Stewart...what a man you are! Wonderful is not a only word to describe this movie...A must watch by every1. The climax will surely well up your eyes. Certainly was I.

நாம் ஏன் வாழ வேண்டும் என காட்டும் படம். தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு, counseling தேவையே இல்லை. இந்த படத்தை ஒரு முறை பார்த்தால் போதும். இதைப்போல ஒரு மகிழ்ச்சியான ஒரு இறுதிக்காட்சி எந்தப்படத்திலும் இல்லை!

Watch it in Youtube...Its available...

Watch the trailer here:

Wednesday, December 8, 2010

2010 - 25 சிறந்த தமிழ் பாடல்கள்

2010 ல் தமிழில் வெளியான படங்களில் இருந்து எனக்கு பிடித்த 25 பாடல்கள்....இசைக்காக அல்லது காட்சி அமைப்புக்காக அல்லது பாடல் வரிகளுக்காக அல்லது பாடகர்கள் பாடிய விதத்திற்காக அல்லது நடன அமைப்புக்காக...

நந்தலாலா - ஒண்ணுக்கொண்ணு..
விண்ணை தாண்டி வருவாயா - மன்னிப்பாயா...
நாணயம் - நான் போகிறேன் ...
அங்காடி தெரு - அவள் அப்படி ஒன்றும்...
விண்ணை தாண்டி வருவாயா - அந்த நேரம் அந்தி நேரம்
எந்திரன் - கிளிமாஞ்சாரோ...
ஈசன் - கண்ணில் அன்பை...
இராவணன் - உசுரே போகுதே...
ஆயிரத்தில் ஒருவன் - ஓன் மேல ஆசதான்...
பையா - அடடா மழைடா...
இராவணன் - கள்வரே...
பாஸ் என்கிற பாஸ்கரன் - யார் இந்த பெண்தான்...
எந்திரன் - காதல் அணுக்கள்...
மதராசப்பட்டினம் - பூக்கள் பூக்கும் தருணம்...
மந்திர புன்னகை - என்ன குறையோ...
பாணா காத்தாடி - தாக்குதே...
மைனா - மைனா மைனா...
மந்திர புன்னகை - மேகம் வந்து போகும்...
நான் மகான் அல்ல - வா வா நிலவ புடிச்சு...
தமிழ் படம் - ஓ மக சீயா...
சிங்கம் - காதல் வந்தாலே...
கோவா - இதுவரை ...
வம்சம் - மருதாணி பூவப்போல...
அசல் - ஓ துஷ்யந்தா...
சுறா - நான் நடந்தால்...

TOP:

Friday, October 1, 2010

எந்திரக் காய்ச்சல்

ஒரு படம் பாத்துட்டு வந்த பிறகு அதோட தாக்கம் இருந்து அதைப்பற்றியே நினைக்க/பேச வைத்தால் அங்கு தான் அந்த படத்தின் வெற்றி ஆரம்பிக்கிறது....அந்த இயக்குனர் தான் சிறந்த இயக்குனர்...அந்த கலைஞன் தான் நல்ல கலைஞன்...அதுதான் உண்மையான வெற்றி.நள்ளிரவில் படம் பார்த்து வந்த பின்பு தூங்கும்போது கூட கனவிலும் காட்சிகள் வந்து நம்மை எழுப்புகிறது என்றால் அது மின்சார கண்ணனால் மட்டும்தான் முடியும்...

இந்த படத்தை பற்றி எவ்வளவோ எழுதலாம்...எழுதுவேன்....முதல் முறை சூப்பர் ஸ்டார் படம் முதல் ஷோ பார்த்த ஒரு பரவசம்....ஒரு உலகத்தரம் வாய்ந்த படத்தை பார்த்த குதூகலம்...கொண்டாட்டம்...களிப்பு...சந்தோசம்.

அமெரிக்கா என்ன...அமிஞ்சிகரை என்ன...சூப்பர் ஸ்டார்னு வந்துட்டா நாங்க எல்லாம் ஒண்ணுதான்னு எவ்ளோ பெரிய பொசிசன்ல உள்ள எல்லோரும் ஆரவாரத்துடன் தியேட்டர் அதிர, சீட் கிடைக்காமல் தரையில் உக்காந்து சந்தோசத்துடன் பார்த்த ஒரு படம்னா அது நம்ம எந்திரன் தான்.

வார்த்தைகள் இல்லை வருணிக்க...விமர்சிக்க...

விதி என்ற ஒன்று உள்ளது...இல்லை என்றால், கலை ஞானிக்கு எழுதிய கதை, கிங் கானிடமிருந்து வந்து தலைவர் தான் நடிக்க வேண்டும் என்று இருந்து இருக்காது...கமல் பக்தனான நானே சொல்கிறேன்..எந்திரன் - தலைவர் தவிர யார் நடித்தாலும் இவ்ளோ பெஸ்ட்டா வந்து இருக்காது...

இந்த படத்த பாத்துட்டு வந்து பிறகு ஒரு வருத்தம்,ஆதங்கம், பதற்றம்...என்னவென்றால், இவ்ளோ அற்புதமா ஒரு டிரன்ட் செட் பண்ணின பிறகு தலைவர அடுத்து இயக்க போவது யார்னு? ஷங்கர் தவிர வேற யாராச்சும் தலைவர அடுத்த உயரத்துக்கு கொண்டு போக முடியுமான்னு ஒரு பரிதவிப்பு.

ஓகே...வர்ணிக்கலாம்...கதை...ரொம்ப சிம்பிள் ஆன லவ் ஸ்டோரி தான்...ஆனா, திரைக்கதை மற்றும் டெக்னிகல் விஷயங்கள் படத்த பத்தி இப்டி உக்காந்து எழுத வச்சு இருச்சு...


தலைவர் நடிப்ப என்னனு சொல்ல...'மே மே மே' னு ஆட்டு குட்டி மாதிரி கத்திகிட்டு வசீகரன கண்டுபிடிக்கிற ஒரு சீன் போதும்...டாப் கியர் ல எகிறுது...கடவுள் இருக்கிறாராங்கற கேள்விக்கு பதில் சொல்லும்போதும்,கடைசில ரோபோவா இருக்கிறது எவ்ளோ நல்லது வசனம் பேசும்போதும் உள்ளத்தை அப்டியே அள்ளிட்டு போய்டுறார்.....பத்ரகாளி வேசத்துல வரும்போதும்(unexpected scene - தியேட்டரே சாமி ஆடுது),ஐசோட லவ்வ உணரும்போதும், மிலிட்டரி ஆபீசர் கிட்ட கவிதை சொல்லும் போதும், வசீகரன் சிட்டியோட ஆன்சர்ச(answers) ரசிக்கும் போதும், ஐசோட சிட்டி டான்ஸ் ஆடும்போதும் frame by frame ரசிக சீமான் அப்டின்னு நிரூபித்துவிட்டார்...ஹாப்பி தீவாளி போக்ஸ்(HAPPY DIWALI FOLKS) னு சொல்லும்போது அப்டியே தியேட்டர் அதிருது... உலக நாயகனுக்கும் தனக்கும் உள்ள நட்பை சிவாஜியில் புகுத்தியது போல இந்த படத்திலும் ஒரு சீன்...தேங்க்ஸ் தலைவா.... Proud to be a fan you both...

என்ன பொறுத்த வரைக்கும் மத்த கேரக்டர் எல்லாமே ஊறுகாய் தான்...தலைவர் தான் மெயின் டிஷ், மெயின் கறி, ஸ்வீட் எல்லாமே..

இந்த மாதிரி காஸ்ட்லி மூவிக்கு ஐஸ் தவிர வேறு யார் தலைவருக்கு ஜோடியா இருக்க முடியும்.. ஐஸ், இராவணன் விட ரொம்ப அழகு..

ARR, Rathavelu, Antony, Sujatha,Shankar,Kaarkki,Peter Hein and Crew, Dance Masters என எல்லோருமே பின்னி பெடல் எடுத்து இருக்காங்க.

நிதி இருந்தால் மட்டுமே இது எல்லாமே சாத்தியம்..இது சத்தியம்... ஐ மீன், கலா நிதி, உதய நிதி, தயாநிதி.....ஹாட்ஸ் ஆப் கலாநிதி அவர்களே....600 கோடி எதிர்பார்க்கிறீர்களாமே...அதுக்கும் மேலயும் கெடைக்கும்...

ஷங்கர்ஜி - இன்னொரு ஹீரோ. தான் நினைத்த எல்லாவற்றையும் தமிழ் பார்முலா சேர்த்து கிராபிக்ஸ் உதவியுடன் ஒரு தாண்டவமே ஆடிவிட்டார்...கதை,திரைக்கதை,வசனம், சண்டை வடிவாக்கம் என எல்லா துறைகளிலும் பூந்து வெளயாண்டுட்டார்...இவருடைய 10 படங்களில் இதுதான் டாப்....

ஒரே ஒரு ஆசை...சத்யம், ஐ மாக்ஸ் போன்ற தியேட்டர்ஸ்ல இந்த படத்த ஒருக்கா அனுபவிக்கனும்...

குழந்தை முதல் முதியவர் வரை(கலைஞர் உட்பட) எல்லோரும் பாக்க வேண்டிய படம்...

இன்னும் நெறைய எழுதுவேன் அடுத்த ஷோ பாத்துட்டு வந்த பிறகு....

A Feel Best Movie and A must Watch one with Family...

- ரசிகன் டா


Saturday, June 19, 2010

ராவணன் என் பார்வையில்...

*************************************************************************************

அதிக எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு நான் செல்லவில்லை.....படம் பார்த்த போது உண்மையாக நான் நினைத்தவற்றை என் பதிவாக சொல்கிறேன்....என் பார்வையில் படத்தின் ஹீரோ சந்தோஷ் சிவன் அண்ட் மணிகண்டன்...ஒளிப்பதிவாளர்கள்... கோ கிரீன் என்பதை மணி இந்த படத்தின் மூலம் ப்ரொமோட் செய்யலாம்... அந்த அளவுக்கு ஒரே கிரீன் எவ்ரிவேர்...பட் நல்லா இருந்துச்சு....சந்தோஷ் சிவன் - வெயிட் பார் தி அவார்ட்ஸ்...

படத்தோட டைட்டில்ஸ் போடும் போது மணி கதை அவரோடது இல்லன்னு போட்டதே அவரோட ஹானஸ்டிய காட்டுச்சு...சுஜாதா இல்லாம சுஹாசினி டயலாக்ஸ் னு பாத்த போதே ஒரு நெருடல் இருந்தது...மேடம் நீங்க நெறைய ட்ரை பண்ணனும்...ஒரே ஒரு வசனம் மட்டும் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு...பிடிச்சிருந்தது...'உண்மையான விஷயங்கள் கேவலமாக தான் இருக்கும் அப்டி மாதிரி வரும்' ...மணி சுஜாதா இல்லாம தடுமாறினது எனக்கு நல்லா தெரிஞ்சது.... எந்திரன் ல ஷங்கர் எப்டி மேனேஜ் பண்ணி இருக்கார்னு பாக்கணும்....

விக்ரம் நல்லா நடிச்சு இருந்தார்...பட், அந்நியன்,சேது, பிதாமகன் படங்களோட பாக்கும் போது அவருக்கு இந்த படத்துல ஸ்கோப் கம்மி....தினவெடுத்த தோள்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப மனுஷன் சூப்பரா
வொர்க் அவுட் பண்ணி பிரமாண்டமா இருந்தார்....,கேரக்டருக்கு ஏத்த உடம்பு...பக் பக், டண் டண் டண் னு சொல்லும் போதெல்லாம் கந்தசாமி படத்துல சேவல் கூவுற சீன் தான் நெனவுக்கு வந்துச்சு...சாரி பாஸ்...உங்களுக்கும் ஐஸ் அக்காவுக்கும் ஒட்டவே இல்ல...நோ கெமிஸ்ட்ரி அட் ஆல்....ஐஸ் நல்லா நடிக்க ட்ரை பண்ணி இருந்தாங்க...ஐஸ்க்கு ஒரு நல்ல காஸ்டியும் டிசைனர் போட்டு இருந்து இருக்கலாம்... ஷி வாஸ் வெரி குட் இன் தி கிளைமாக்ஸ் சீன்.... ஐ லைக்ட் பிருத்வி ராஜ் கெட் அப்...என்னய்யா இவர் வந்து வீரய்யா...வீரய்யா..னு கத்திகிட்டே இருக்கார்.....ஐ காட் போர்ட். கள்வரே பாட்ட ரொம்ப எதிர்பார்த்து காத்து இருந்தேன்...இன்னும் நல்லா படமாக்கி இருக்கலாம்....
ஐஸ் உங்க கெமிஸ்ட்ரி எனக்கு தெரிஞ்சு பிரஷாந்த் கூட தான் நல்லா இருந்துச்சு தமிழ் சினிமால...நீங்க பக் பக் னு கடைசில சொல்லும்போது ஒரு அழுத்தம் இல்லீங்க.... என்னை அறியாமல் பிரபுவின் செய்கைகள் சிரிக்க வைத்தன..கார்த்திக் நடிப்பு ஓகே...சார்...நீங்க திரும்பவும் அரசியலுக்கு வராதீங்க....உங்க தோழில் இதுதான்...உங்க மேடை சினிமா தான்...பிரியா திரும்பவும் மை பாவரிட் பருத்தி வீரன நெனவு படுத்தினீங்க....தேங்க்ஸ்.... கோடு போட்டா பாட்ட ரொம்ப ரசிக்க முடிஞ்சது....

சந்தோஷ் சிவன் ஒவ்வொரு காட்சிலயும் கண்ல ஒட்டிக்கிட்டார்...ஐஸ் மலைல இருந்து குதிக்கிற காட்சி, தினத்தந்தில ஒவ்வொரு போட்டோ வையும் எரிக்கிற காட்சி...பாலத்துல சண்ட, தட்டான் பூச்சிய க்ளோஸ் அப் ல காட்டுனது, ஸ்க்ரீன் ல மழை பெய்தா, நாம தேட்டர்ல நனைற பீலிங்...நீங்க தான் சார் ஹீரோ...உங்க கிட்ட இந்த சீன்ஸ் எக்ஸ்ப்ளைன் பண்ணின மணி ஒரு ஹீரோ...

அஸ் யுசுவல், ரஹ்மான் சார்...சூப்பர் சாங்க்ஸ்...ஸ்ரேயா மேடத்துக்கு ஒவ்வொரு (தமிழ்) படத்துலயும் தயவு செய்து வைப்பு கொடுங்க சார்...கள்வரே...ஹெர் மாஸ்டர் பீஸ்... வைர முத்துவின் வரிகள் ராமாயணத்தின் பிரதிபலிப்பு... உசுரே போகுதே-> கவிதை மழை...

கண்டிப்பாக தியேட்டரில் (ஐ சஜஸ்ட் நல்ல மல்டிப்ளெக்ஸ் சினிமாஸ்) பார்க்க வேண்டிய படம்...அட்லீஸ்ட் ஒரு தடவை...மாக்சிமம்,படம் பார்த்த பிறகு ஒவ்வொருவர் விருப்பம்...

மணி சார்...நெறைய பேர் உங்களோட பெஸ்ட் படங்கள நாயகன், மௌன ராகம், ரோஜா, பம்பாய் லாம் சொல்லுவாங்க....என்னோட சின்ன வயசு , இல்ல நான் பிறக்கும் முன்னாடி இவை எல்லாம் வந்ததால எனக்கு அந்த படங்களை பீல் பண்ண முடில..அவை எல்லாம் நல்ல படங்கள்...என்ன பொருத்தவரைக்கும் கன்னத்தில் முத்தமிட்டால், அலை பாயுதே லாம் உங்களோட மாஸ்டர் பீஸ்...கன்னத்தில் முத்தமிட்டால் பார்த்துட்டு நெறைய யோசிச்சேன்...நெறைய இம்பக்ட் இருந்துச்சு...அமுதா வ செதுக்கி இருந்தீங்க....நம் தமிழன் படும் வேதனைகளை அப்பட்டமாக காட்டி கண்களில் எங்களுக்கு கண்ணீர் ஊற்று எடுக்க வச்சீங்க...
அலை பாயுதே பாத்தா யாருக்குனாலும் காதல் பண்ணனும்னு தோணும்...நெறைய சீன்ஸ் மனசுலையே இருக்கும் அந்த படத்துல...பட்...ராவணன் அந்த கேடகரில இல்ல சார்....எனக்கு எந்த சீனும் மனசுல நிக்கல...விக்ரம் சாகும் போது ஒரு லம்ப் உருவாகல...பட், எனக்கு, கமல் வரிசைல, ஸ்டில் நீங்களும் ஒரு பெஸ்ட் டைரக்டர் தான்...

Friday, May 7, 2010

*20 நாளில் இந்தியன் ஆகலாம்*

*20 நாளில் இந்தியன் ஆகலாம்*
- My Summer at 2010 in India...

இப்போ நடக்கிற விசயங்கள நாம குறிப்பு எடுத்து வச்சு பிற்காலத்தில படிக்கும் போது அது ஒரு தனி அனுபவம்ங்க....நமக்கு அப்டியே கடந்த காலத்த கண் முன்னாடி கொண்டு வந்துடும்....அதனாலதான் நான் இப்போ இந்தியால இருந்த 20 நாள்ல நடந்த மறக்க முடியாத விசயங்கள எழுதுறேன்....சில விசயங்கள ரொம்ப ரசிக்க முடிஞ்சது...சில நேரங்கள எரிச்சல், கோபம் வந்தது....கொஞ்சம் விலாவாரியா பாப்போம்...

* நியுயார்க் டூ சென்னை விமான பயணமே ஒரு சிறப்பான,மறக்க முடியாத அனுபவம் இந்த முறை...காரணம் யாசர் அம்மா...அவங்களுக்கு எங்க அம்மாவவிட வயசு அதிகம்...பட்...எங்க அம்மா மாதிரியே மூட்டு வலி அண்ட் வேகமா நடக்க முடியாது இந்த இளைய விஜய்ய போல...ஏர்போர்ட்ல யாசர் அண்ட் அம்மாவோட பிரியாவிடை எனக்கு மறக்க முடியாத அனுபவம் டா...எங்க அம்மாவ ஆன்சைட்ல இருந்து இந்தியா கூட்டிட்டு போன ஒரு பீலிங்...தேங்க்ஸ் யாசர்....

* அண்ணா இப்போ நல்லா கார் ஓட்றான்...அவன் சொந்த கார் வாங்கி வச்சுருக்கான்...நல்லா டீல் வந்தா வித்துருவேன்நு சொன்னான்...டாட்டா இண்டிகா...இந்தியால எல்லா விலையும் கூடின மாதிரி ஒரு பீலிங் எனக்கு...

* வீடு போன வருஷம் பாதிதான் கட்டி இருந்துச்சு...இப்போ புல்லா முடிஞ்சிருச்சு...தேங்க்ஸ் டூ அப்பா அண்ட் அண்ணா ஹு பில்ட் இட் வெரி நய்ஸ்லி...எங்க தெரு வியுவே இப்போ மாறிடுச்சு.....அண்ணா வீடும் நல்லா டிசைன் பண்ணி கட்டி இருக்கான்....

* அக்க்ஷய் அண்ட் ஸ்ரீநிதி...ரெண்டு பேரும் நல்லா வளந்துட்டாங்க...முதல் பத்து நாளுக்கு அக்க்ஷய் என்கிட்டே வரவே இல்ல...அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஒட்ட ஆரம்பிச்சான்...அவனுக்கு அவங்கம்மா பேஸ்... அவன் இன்னும் நல்லா பேச ஆரம்பிக்கல...ஒருமாதிரி தலைய ஆட்டிக்கிட்டு ஹும்...ஹும் நு எது கேட்டாலும் பதில் சொல்லுவான்...வெரி கியூட் சாஃ ப்...பட்,அடம் பிடிச்சா அவனும் அவன் அக்கா ஸ்ரீயும் அழுறது என்னக்கு சில நேரங்கள கோபம் வர ஆரம்பிச்சிருச்சு...நம்ம மச்சுரிட்டி அப்டி.....

* அழகி...எஸ்...ரேணு தான்...எங்க குடும்ப செல்ல பிள்ளை...மகாலட்சுமி னு அப்பா அடிக்கடி சொல்வார்... அவள பாத்த உடனே, அக்காட்ட சொன்ன விஷயம் ரேணுக்கு கூந்தல் வளந்துருச்சுக்கா னு தான்... உவரி டூர் ல என் மடில தான் தூங்கிகிட்டு வந்தா....சீக்கிரம் கோவம் வர வச்சிராலாம்....சினிமா,டிவி பாத்து நெறைய பேசுறா...நாங்கலாம் சின்ன வயசுல இந்த மாதிரி பேசுனது கெடயாது...இப்ப கூட அப்டித்தான் ....எங்கம்மாவ ஆச்சின்னு சொல்லமாட்டா...அப்பாவ தாத்தானு சொல்றது கெடயாது... உங்கம்மா, உங்கப்பா, உங்க அக்கா(அவ அம்மாவ) அப்டி னு தான் சொல்வா...ஒரு தடவ கோவத்துல எங்க அம்மா கூட கோச்சிக்கிட்டு நீங்கதான் ஏன் எங்க அம்மாவுக்கு அம்மாவ வந்தீங்க னு அழ ஆரம்பிச்சா...எங்க எல்லோருக்கும் சிரிப்புதான் வந்துச்சு...நவ் அ டேஸ், சுட்டிஸ் ஆர் வெரி ஷார்ப் அண்ட் ப்ரில்லியன்ட்... சிவா என்ன லீவ் போட்டு இன்னும் ஒரு மாசம் இருங்க மாமா னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டான்...அவன் தான் கேம்ஸ் என் மொபைல் ல இருக்கிறத கண்டுபுடிச்சான்...அது வரைக்கும் அது இருந்தது எனக்கு தெரியாது......நெறைய தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் அதிகம் அவனுக்கு....என் டிஜிட்டல் காம் ல நெறைய போட்டோ அவனும், ரேணுவும் தான் எடுத்தது.... ரிமோட் கார ஒரு வாரம் நல்லா ஓட்டினாங்க...அதுக்கு அப்புறம் பேட்டரி போயிருச்சு...

* வெயில்...நெஜமாவே என் உடம்பு இந்திய கிளைமட்டுக்கு ஒத்து வரல.....ஒரு நாளைக்கு ரெண்டு கேன்கீஸ்(hankies) வேண்டி இருந்தது....இருபது நாளும் மினரல் வாட்டர் தான்....டெய்லி நைட், மொட்ட மாடிலா தான் நான், அம்மா, அப்பா தூங்குனது ....இன்னும் நான் எங்க அம்மா அப்பாக்கு குட்டி பையன்தான்....அவ்ளோ கேர் என் மேல...எல்லோரும் எனக்கு வேண்டியத பாத்து பாத்து பண்ணினாங்க...எங்க சமையல்ல இந்த தடவ சாப்ட முடில...புஃல் சமையலும் அண்ணிதான் பண்ணினாங்க...தேங்க்ஸ் டூ ஹெர்.....வீட்ல இருந்த எல்லா நாளும் அம்மா தான் எழுப்புனாங்க..இப்போ எனக்கு டீ, காபி லாம் கட்.. பக்கத்து வீட்டு பசுமாட்டு மில்க் தான்.....காலேஜ், ஸ்கூல் போகும் போது இப்டி தான் எழுப்புவாங்க...பழய ஞாபகம் வர ஆரம்பிச்சிருச்சு.....தே டிட் லாட் பா ஃ ர் அஸ்..... தே ஆர் கிரேட்...

* முக்கியமா ஊருக்கு போனதே பொங்கல் திருவிழா பாக்கத்தான்....இந்த தடவ, இரு பிரிவினருக்கு இடையே இருந்த இட பிரச்சினை காரணாமாக,
அரசாங்கம்,கோர்ட்,போலீஸ் உத்தரவின் பேரில் சாமி ஊர்வலம் புது ரூட்ல போனது...போலீஸ் பந்தோபஸ்து இருந்ததால கலவரம் ஏதும் வரல...
கலவர பூமில காத்து வாங்கிகிட்டு இருந்தேன்...இருந்தோம்...

* சென்னை ட்ரிப் ஃ பார் விசா ஸ்டாம்பிங்: வெயில் கொடுமை... ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க முடில...மயக்கம் வர்ற மாதிரி பீஃலிங்க்....ஆட்டோ பிடிச்சு ஆபீஸ் போயிட்டேன்...சென்னை பஸ் பயணம் எப்பவுமே எனக்கு பிடிக்கும்...எந்த தடவையும் நெறைய இடங்களுக்கு பஸ் ல தான் போனேன்...வட்டி எனக்காக லீவ் போட்டான்...தேங்க்ஸ் டா...மாயாஜால் பர்ஸ்ட் டைம் போனேன்... பையா பாத்தோம்...பாலவாக்கம்...மறக்க முடியாத ஒரு இடம்...இன்னும் அங்க தான் எங்க ஷெல்ட்டர்... சென்னை ல எல்லா கிளாஸ் ஹோடேல்ஸ் லயும் சாப்டோம்... அல்மோஸ்ட், ஐ மெட் மை ஆபீஸ் மேட்ஸ்...துரதிருஷ்டவசமா என்னோட காலேஜ் பிரண்ட்ஸ் அண்ட் ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லோரையும் சந்திக்க முடில...ஒரு கால் கூட பண்ண டைம் இல்ல.....அக்கா வீட்டுக்கு போய் இருந்தேன்...ஹர்ஷித் வளர்ந்துட்டான்...நல்லா பேசுறான்...அகிலாக்கு பைக் ல இருந்து விழுந்து இஞ்சுரி...இந்த தடவ தங்கச்சிய பாக்க முடில...ஷி டோல்ட் தட் ஷி வில் மீட் மீ இன் தி ஏர்போர்ட்...பட் ஷி குடன்'ட்... சில புக்ஸ் வாங்கினேன்....டாலர் தேசம், I too had a love story, 3 mistakes of my life and 2 states...ரீட் பண்ணனும்..... ஐ லவ் டு இன்வெஸ்ட் இன் தி புக்ஸ்...

* இந்த டைம், நெறைய நடிகர்கள பாக்ற சந்தர்ப்பம்....பிரகாஷ் ராஜ், சினேகா, சாலமன் பாப்பையா, பாரதி ராஜா, வடிவேலு, சசிகுமார் னு பட்டியல் நீண்டது... பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு எனக்கு அடுத்த சீட்ல தான் உக்காந்து இருந்தாரு விமானத்துல...இதயம் பத்தி பேசலாமான்னு நெனச்சேன்...பட்...அப்புறம் அது நல்லா இருக்காது னு நெனைச்சிகிட்டேன்.....சாலமன் பாப்பையா அய்யாகிட்ட மட்டும் பேசினேன்..

* கவுண்டன்பட்டி ஜோசியர்...அம்மா,அப்பா,அக்கா க்கு ஒரு நம்பிக்கை அவர் சொல்றது எல்லாம் எனக்கு நடக்குதுன்னு...சோ...வி வென்ட் திஸ் டைம் அண்ட் மெட் ஹிம்... அவர் தான் பொண்ணு பாக்ரத ஒரு ஒரு மாசம் தள்ளி போடுங்கனு சொன்னார்...நெறைய சொன்னார்...சில விஷயங்கள் அவர் சொன்ன மாதிரியே நடந்தது...இது கோ இன்சிடென்ட் ஆ, இல்ல, ஜோசியமானு எனக்கு தெரில.....அம்மா, அப்பா நம்பிக்கை னு விட்டுட்டேன்...லெட்ஸ் ஸீ வாட் ஹப்பென்ஸ் னு...

* திடீர்னு ஐ பி எல் ஃபீவர்... சென்னை சூப்பர் கிங்க்ஸ் அண்ட் மும்பை இந்தியன்ஸ் ஃபேன் நான்...கடைசில, சி எஸ் கே வான் தி டைட்டில்... இது ஒரு பொழுது போக்கு...

* எல்லா விதமான சாப்பாடும் சாப்பிட்டேன்....குறிப்பா...ரொம்ப பிடித்த குடல் குழம்பு,ரத்த வறுவல், சிக்கன் குழம்பு, மீன் வறுவல், மட்டன் ப்ஃரை, பூரி, கம்பங்கூழ் னு ஒரு கை பாத்தாச்சு...ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்...பழய சோறு,தயிர்,கருவாடு காம்போ சாப்ட முடில...

* மருத்துவர்...இந்த தடவையும் பொன்னையா டாக்டர பாக்க வேண்டியதா போயிருச்சு....பூட் பாய்சனால ஒரே ஃபியுக்கிங்...சோ..ஒன் இன்ஜக்சன்...அப்புறம், ஜெய பிரபா...டெர்மட்டாலஜிஸ்ட்...எங்கப்பா அவங்கள கெட்டிக்காரி னு பட்டமே குடுத்துட்டார்...கால் ல இருந்த பத்த கியூர் பண்ணிட்டாங்க....அவங்க மாதிரி தான் ஒரு பொண்ணு கூட அக்கா பாத்து வச்சிருந்தான்னு அப்புறம் கேள்விப்பட்டேன்...

* உவரி,கன்னியாகுமரி,திருபரப்பு,பத்மநாபபுரம்னு ஒரே குடும்ப சுற்றுலா தான்..... உவரி கடல் ல ஒரே ஜாலி குளியல் தான்...

* வீடு: மாமா ட்ட வீடு பாக்கணும் னு சொல்லவும் ரொம்ப தீவிரமா இறங்கிட்டார்.....திருச்சி, மதுரை னு நான் லோகேசன் தான் குடுத்தேன்...சித்ரா பௌர்ணமி அன்னிக்கு (அழகர் ஆத்துல இறங்கினார்) வீடு பாக்க அண்ணன் கார்ல அஞ்சு பேர் போனோம்...மதுரை ல ஏழு வீடு மற்றும் திருச்சில ரெண்டு வீடு னு ஒரே நாள்ல பு ஃ ல் அலைச்சல்....மதுரை பெருங்குடி வீடு ரொம்ப பிடிச்சது...ரெண்டாவது, திருச்சி வீடு....பட், அது அவுட்டர் ல இருந்தததால யோசிக்க ஆரம்பிச்சோம்.... மதுரை டூ திருச்சி ...நெடுஞ்சாலை...சூப்பர்... எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசை....இந்தியா இஸ் நொவ் ஒன்லி சாடிஸ்பியிங் பீப்புள் நீட்ஸ் ஒன் பை ஒன்...

* ஏர் டெல் கார்டு வாங்கி இருந்தேன்...வீட்ல இருந்து ப்ரௌஸ் பண்ண முடிஞ்சது...அட்லீஸ்ட் ஆர்குட் அண்ட் ஜிமெயில் வீட்ல இருந்து செக் பண்ண முடிஞ்சது...

* மாணிக்கம் வீடு, விக்கி வீடு என பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயிருந்தேன்...விக்கி கல்யாண வீடியோ பாத்தேன்...ஒரே சிரிப்புமயம் தான்... அம்மா வீட்ல சிறப்பான கவனிப்பு... அம்மாவோட அம்மா எங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க....ஆண்டாள் கோவிலுக்கு அவங்கள கூட்டிட்டு போனேன்...
மீனாட்சி கோவில் போயிருந்தேன்.....சாமிய பாக்க சிறப்பு தரிசனம் பேர்ல நடக்குற வியாபாரம் எப்போதுதான் ஒழியுமோ?

* ஒரு பைக் இல்ல...ரொம்ப கஷ்டமா இருந்துச்சு கம்மியுடேசனுக்கு....ஐ ஹாட் டு டிபெண்ட் ஆன் அண்ணா பாஃர் கம்மியுடேசன்... அண்ணா அவைலப்லா இல்லனா ஆட்டோ தான் பிடிக்க வேண்டி இருந்துச்சு....

* லாஸ்ட் டே... பாரா மவுண்ட் ஏர்வேய்ஸ் கான்செல் ஆச்சு அட் லாஸ்ட் மினிட்...எல்லோருக்கும் ஒரே பிரஷர்,டென்ஷன்,ஸ்ட்ரெஸ்....விமானம் கான்செல் ஆச்சுனு தெரிஞ்ச வுடனே அடுத்த விமானத்துல புக் பண்ணனும் னு கல்லுபட்டி டூ ஏர்போர்ட் வரைக்கும் அண்ணன் கார ஓட்டின வேகம் மறக்க முடியாது...இட்ஸ் டான்ஜெராஸ் டு டிரைவ் இன் மதுரை ரிங் ரோடு அட் எவெனிங்...அப்புறம் அதிர்ஷ்டவசமா ஜெட் ஏர்வேய்ஸ் ஹெல்ப் பண்ணினது...ஒரு வழியா சென்னை வந்து அப்புறம் அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.... அப்பா, அண்ணா, ஜெயராஜ் அண்ணா எனக்காக நான் கெளம்புற ( மிட் நைட்) வரைக்கும் மதுரை ஏர்போர்ட் ல காத்து இருந்தாங்க... தேங்க்ஸ் டு கொன்றை ஹூ பிராட் மை பாஸ்போர்ட் டு சென்னை ஏர்போர்ட் அட் மிட் நைட் 2.30AM.....

இத நான் எப்ப படிச்சு பாத்தாலும் எனக்கு ஊருக்கு போயிட்டு வந்த இருபது நாளும் திரும்ப வந்துரும்...

Wednesday, March 3, 2010

***********************************************
மன்னிப்பாயா...ஒரு தாலாட்டு....
***********************************************
விண்ணை தாண்டி வருவாயா ஆடியோ ரிலீஸ் பண்ணின நாளில் இருந்து தினமும் தூங்கும் போது கேட்கிறேன் இந்த பாடலை...

முதல் காரணம் என் ஆத்ம தங்க தலைவி ஸ்ரேயா கோஷல். முதலில் ஒரு சிறு வருத்தம் என்னடா ரஹ்மான் போய் இந்த பாட்டுக்குனு...

கேட்க கேட்க முதல்ல வரிகள் ரொம்ப பிடிச்சது...இந்த பாடல் தான் ஜெஸ்ஸியோட குணம்....இந்த படம்....

உன் குரல்வளையில் அப்படி என்ன இருக்கு ஸ்ரேயா...பாட்ட கேட்ட இரண்டொரு நிமிடங்களில் நித்திராதேவி என்னை ஆட்கொண்டுவிடுகிறாள்....அப்டி ஒரு மயக்கம் வருகிறது....பட்டாம்பூச்சி பறக்கிறது வயிற்றுக்குள்...நெஞ்சு பட படக்கிறது...முழுசா சொல்ல தெரில... கண்களில் கண்ணீர் வருகிறது... உங்க யாருக்காவது அப்டி இருந்திருக்கா?

.இதுக்கு முன்னாடி "கண்ணில் காணும்...(நான் கடவுள்)" "முன்பே வா...(ஜில்லுனு ஒரு காதல்)", "அந்த நாள் ஞாபகம்...(அது ஒரு கனா காலம்)" "உன்ன விட..(விருமாண்டி)" மூலமாகதான் தான் பாடாய் படுத்தினாய்...

லதா, ஆஷா, சுசீலா,ஜானகி, சித்ரா பத்தியெல்லாம் கேள்வி பட்டு இருக்கேன்...இவங்க கிட்ட மத்தவங்க உணர்ந்த அந்த இனிமையான குரலை நான் உன் குரலில் கேட்கிறேன்..... இசை மற்றும் பாடல்கள் உன் மூலம் பெருமை அடைகின்றன...

ஒண்ணு மட்டும் நிச்சயம்...இந்த பாடலில் ஒரு வரி வரும்...'அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்...எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்" அப்டின்னு...அது நிச்சயம் ஸ்ரேயா.... என் தலையணை தினமும் நனைக்கப்படுகிறது உன் குரல் கேட்டு....

திருக்குறள் சேர்த்து என்னை திருக்குறள் புத்தகத்தை திருப்பி பார்க்க வைத்த தாமரை மற்றும் கௌதமிற்கு நன்றி...

ரஹ்மான் சார்...அது என்ன வெளிச்சம் என்னும் சொல்லை அப்டி ஒய்யாரமாக,அழகாக உச்சரிச்சு இருக்கீங்க...எனக்கு ஒரு செகண்ட் ல புல்லரிச்சு போச்சு...ஆவ்சம் சார்....

நன்றி ரஹ்மான், தாமரை,ஸ்ரேயா மற்றும் கௌதம் அவர்களே..

Saturday, February 27, 2010

கல்யாணத்துக்கு பெண் தேடறிங்களா??

"கல்யாணத்துக்கு பெண் தேடறிங்களா, இன்பா. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போங்கோ. சுவாமி முன்னாடி அமர்ந்து, இதில் இருக்கும் சுலோகங்களை படிங்கோ. சீக்கிரம் நல்ல பெண் கிடைப்பா " என்று எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்மணி சொன்னார். அவர் ஒரு வழக்கறிஞரும் கூட.

அவ்வாறு சொல்லி, அவர் எனக்கு தந்த புத்தகம் "ஹனுமான் சாலிசா".

"ஸ்ரீ குரு சரந ஸரோஜ ரஜ நிஜ மனு முகுரு ஸுதாரி
பரநஉ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி
புத்திஹீந தநு ஜாநிகே. ஸுமிரௌம் பவந குமார
பல புதி பித்யா தேஹு மோஹி ஹரஹீ கலேஸ பிகார "


என தொடங்குகிறது ஹனுமான் சாலிசா. இந்த வரிகளின் அர்த்தம், ஸ்ரீ குருவின் பாதாரவிந்தத்தில் இருக்கும் மகரந்த பொடிகளால் என் மனம் என்ற கண்ணாடியை தூய்மை ஆக்கி தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களைக் கொடுக்கும் என்பதாக படித்தேன். (பார்க்க :http://meerambika.blogspot.com/2007/03/intuition-2-1-2.html).

இதை இயற்றியவர் ஸ்ரீ துளசி தாசர் என்னும் ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர். இது ஒரு ஆஞ்சிநேயர் ஸ்துதி என்று கூறாமல் 'ஸித்த க்ரந்தம்' என்று அழைக்கிறார்கள் சமஸ்கிரதத்தில்.

ஹனுமான் சாலிசாவை காலையும், மாலையும் முழு நம்பிக்கையுடன் அனுமார் சந்நிதியில் அல்லது அவரது திருவுருவ படத்திற்கு முன்னால் சொன்னால் எல்லாவித காரியங்களும் நல்லவிதமாக நடக்கும், தடைகள் நீங்கும் என்று நான் கண்டு இருக்கிறேன் என்று சொன்னார் அவர்.

ஆனால், அந்த புத்தகத்தை,சுலோகங்களை நான் முழுமையாக படிக்கவில்லை. சிறிது நேரம் புரட்டிவிட்டு, மூடிவிட்டேன். அதன் பின், ஒரு சனிக்கிழமையில் என்னை சந்தித்த அந்த பெண்மணி, "நீங்க ஹனுமான் சாலிசாவை திறந்து கூட பார்க்கலைன்னு நினைக்கிறேன் " என்றார் பளிச்சென்று. நான் ஆம் என்று தலை ஆட்டியபோது, உடனே நங்கநல்லூர் கோவிலுக்கு அழைத்து சென்று, ஸ்ரீ அனுமார் சன்னதி முன்னர், ஹனுமான் சாலிசாவை படிக்க வைத்தார். அது நடந்த சில மாதங்களுக்கு பின், தற்போது, எனக்கு பெண் கிடைத்து விட்டார். ஹனுமான் சாலிசா படித்த பின், இப்படி எனக்கு நேர்ந்து இருக்கிறது.

நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கிறது என்பதை பல சமயங்களில், நம் அன்றாட வாழ்க்கை உணர்த்தி வருவதை, நீங்கள் உணர்ந்து இருக்கிறிர்களா நண்பர்களே?


-------நன்றி இன்பா : Courtesy: http://idlyvadai.blogspot.com/

Friday, February 26, 2010

விண்ணை தாண்டி வருவாயா என் விமர்சனம்

*********************************************************************
விண்ணை தாண்டி வருவாயா என் விமர்சனம்
**********************************************************************
* முதலில் மனோஜ்(ஒளிப்பதிவு)க்கு ஒரு ஷொட்டு. த்ரிஷா,கேரளா,மால்டா என அசத்திவிட்டார். கண்ணில் ஒட்டி கொண்டது...அவ்ளோ அழகு
* ரஹ்மான் சார். பின்னணி மற்றும் பாடல் அருமை.....கலர்ஸ் அருமை.
** சிம்பு(கார்த்திக்): அவ்ளோ முதிர்ச்சி நடிப்பில்.நீ விரல ஒளிச்சு வச்சுட்டு இந்த மாதிரி ஸ்கோப் உள்ள கேரக்டர்ல நடிப்பா.
*** த்ரிஷா(ஜெஸ்ஸி): அழகு சொல்ல வார்த்தை இல்லை. திரிஷாவா இது என சில இடங்களில் என்னையும் மறந்து ரசித்தேன்.திரிஷாவை இவ்ளோ அழகாக காட்டியதற்கு கௌதமிற்கு பாராட்டுக்கள். ஜெஸ்ஸி: குழப்பமான காதலி. காதல் என்பது என்னவென்று தெரியாமல் குழம்பி, பெரும்பாலான பெண்களின்(80%) குணத்தை கடைசியில் தெரிவித்தாள்.பயங்கர கோபம் ஜெஸ்ஸி மீது.
***கௌதம்: இறுதியில் மனதை அழு(த்)தும் காட்சி இருக்கும்..சில வினாடிகள் அது தூக்கி போடும் என்று படம் வரும் முன்னரே சொன்னார். உண்மைதான்.ஜெஸ்ஸி முதல் கல்யாணம் வேண்டாம் என வேறு அழுத்தமான காரணம் சொல்ல வைத்து இருந்தால் ஜெஸ்ஸி மீது மதிப்பு கூடி இருக்கும்...அதை கார்த்திக் மீது காதல் என்ற காரணம் என்று சொல்லி குழப்பமான காதலியின் மீது கடுங்கோபம் உண்டாக்க காரணம் இவர்தான்.

நளினி ஸ்ரீராம்: திரிஷாவின் அழகிற்கு ஒரு காரணம் இவர்தான். நன்றி நளினி. என்னோட கல்யாணத்துக்கு என் வைப் க்கு சாரி டிசைன் அண்ட் செலக்சன் நீங்கதான் பண்ணனும்.....அனைத்து உடைகளும் அவ்ளோ அருமை திரிஷாக்கு....

*** சில பிடித்த வசனங்கள் : "ஒப்பந்தம் என்பது உடைப்பதற்கே".."நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்" "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி னு சொல்லுதா?"

*** பிடிக்காதவை: ஒரே மாதிரியான வசனங்கள் பல தடவை சோர்வடைய வைக்கிறது...மிகவும் மெதுவான இரண்டாவது பாதி திரைக்கதை, அமெரிக்க ஜெஸ்ஸி..பாடல் ஒளிப்பதிவு: எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருந்த ஒரு சோர்வு.

Monday, February 15, 2010

விண்ணைத்தாண்டி வ‌ந்தாள்....

அய்யோ.. ஆறு ம‌ணிக்கு எந்திரிக்க‌ணும்...

எந்த‌ ப‌ஸ்ல‌ போறது???

ஓட்ஸ‌ தேடு...காலைலே சாப்ட‌ மற‌க்காத‌டானு அம்மா சொல்லிருக்காங்க‌...

காலேல‌ ஆபிஸ் போகும் முன்னாடி மெயில் எதுமே செக் ப‌ண்ணல‌யே...

ப‌னி வேற‌ ச‌ண்ட‌க்கார‌ன் மாதிரி மூஞ்சிலே அடிக்குது...

அம்முகிட்ட‌ வேற‌ பேச‌ணுமே...இன்னிக்கு எத்ன‌ மீட்டிங்னு தெரில‌...

மெயில் திற‌ந்து பாத்தா ஒரே இஸ்ஸீயூசா இருக்கே...

பில்ல‌ கட்டு...இல்ல‌ மொபைல் கட்டுனு ஒரு எச்ச‌ரிக்கை மெசேஜ் வேறு...

அக்கா வேற‌ கேக்குறா பொண்ணு யார் மாதிரி இருக்க‌ணும்னு...

இப்டி ஏக‌ப்ப‌ட்ட பிர‌ஷ‌ர்ல‌ திடீர்னு

ஒரு மின்ன‌ல் போன்ற புன்ன‌கை என் மீது வீசிய‌து...

எல்லாம் ந‌ம்ம‌ த்ரிஷா தான்...என்னோட‌ மொபைல்ல‌ருந்து...

விண்ணைத்தாண்டி வ‌ந்தாள்...

அக்கா.. கெள‌த‌ம் ப‌ட‌ ஹீரோயின் மாதிரி பொண்ணு இருந்தா

ஓகேனு ச‌ட்டுனு வெட்க‌ப்ப‌ட்டு

போன் பண்ணாமலே சொல்லிட்டு

போன வ‌ச்சுட்டேன்..

-- AADMK(அகில‌ அமெரிக்க‌ திரிஷா முன்னேற்ற‌ கழ‌க‌ம்)

Saturday, February 13, 2010

பசங்க பார்க்: காதல் கொண்டாட்டங்கள்

********************************************
பசங்க பார்க்: காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்:
********************************************

காலை 6 மணி: வணக்கம் அமெரிக்கா : இதில் சிறப்பு விருந்தினராக த்ரிஷா கலந்து கொண்டு "விண்ணை தாண்டி வருவாயா...காதல் பூக்கள் தருவாயா..." பற்றி சுவையான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்: Jet Airways, Walmart

காலை 8 மணி: காதல் செய்திகள்.

காலை 8.30 முதல் 10 மணி வரை: காதல் மாலை - அனைத்து மொழிகளிலும் வெளியான சிறந்த காதல் பாடல்கள், படைப்புகள் ஒரு பார்வை. - வழங்குபவர் : காதல் இளவரசன் கணேசன் அவர்கள்.

நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்: 'DUNKIN DONUTS 60 Year celebration with Pasanga Park'

காலை 10 மணி : தற்காலத்தில் காதல் வளர பெரிதும் உதவுவது தகவல் தொடர்பு நுட்பமா? இல்லை புத்தகங்களா? - சந்தோஷ அடிகளார் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றம்.

நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'BIG Y'

காலை 11.30 மணிக்கு : அமெரிக்க தொலைகாட்சிகளில் முதல் முறையாக: சிறப்பு லொள்ளு சபா: " தமிழ் படம்"

நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'IBM'

மதியம் 2 மணிக்கு: பசங்க பவன் சிறப்பு பதார்த்தம்: காதல் ரசம் செய்வது எப்படி? வழங்குபவர்: 'அம்மா'.

நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'PRIYA RESTAURANT','TACO BELL'

மாலை 3 மணிக்கு: காதல் கசக்குதையா : ஒரு வித்தியாசமான கலந்துரையாடல்.

நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'OLD NAVY','SONY Products' and 'NBA'

மாலை 4 மணிக்கு: சிறப்பு திரைப்படம்: 'மை நேம் இஸ் கான்' .

நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'WINDOWS 7','APPLE Products'

இரவு 8.30 மணிக்கு: காதல்...காதல்...காதல்...காதல் போயின் காதல்....ஒரு கலையரங்கம்....காதல் பாடல்களுக்கு: இசை, நடனம், நாடக வடிவில் ஒரு வித்தியாச முயற்சி.... தலைமை: ' மாஸ்டர்' தீபக்ஜி.

நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்: 'HARD ROCK CAFE'

பசங்க பார்க்கின் காதல் தின நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாருங்கள்...அடுத்த நாள் அலுவலக வேலையை பாருங்கள்....

Tuesday, January 26, 2010

விண்ணைத் தாண்டி வ‌ருவாயா - Trailer

:-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)

AAROMALE SONG BACKGROUND...

எப்ப‌வுமே கூட‌வே இருக்க‌ணும்.அதான் True Love .அது என‌க்கு ந‌ட‌ந்த‌து.

So actualla நான் Jessiya Choose ப‌ண்ணினேன்.என்ன‌ அடிச்ச‌து அந்த‌ காத‌ல்.

இதான் JESSIE.அவ்ளோ அழ‌கு.CLASSY.ப‌டிச்ச‌வ‌.WELL TREADED.அவ‌கிட்ட‌ ஒரு STYLE இருக்கு and SEXY TOO.

நீ என்ன‌ Follow ப‌ண்ண‌லேல‌..

இந்த‌ உல‌க‌த்துல‌ இருக்கிற‌ எல்லா பொண்ணுங்க‌ள‌யும் நான் த‌ங்க‌ச்சியா ஏத்துக்கிறேன்.இனிமே உன்ன‌த் த‌விர‌..

ஏன்?

அதெல்லாம் சொல்ல‌ முடியாது. முத‌ல் ப‌ட‌ம் வ‌ரும். அதுல‌ சொல்றேன்.

I Hate You...

Thank You...

வேணாண்டா? பெரிய‌ பிர‌ச்சினை ஆயிரும்.

வேணாண்டா? பிர‌ச்சினை வ‌ரும்...

நீ அதுல‌ Serious ஆ இருக்கியா?(Its not?? fucking believable)இங்க‌ என்ன‌ சொல்லுது? Jessie Jessie சொல்லுதா?

எவ‌னா இருந்தாலும் பாத்துரலாம்..உங்க‌ அப்பாவா இருந்தாலும் ச‌ரி...

Its all over now..என‌க்கு க‌ல்யாணம் arrange ப‌ண்றாங்க‌. நீ வ‌ந்தீல‌.அதே church...

என்ன‌ என்ன‌ ப‌ண்ற‌ சொல்ற‌ கார்த்திக்?

போய் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ Jessie... நீ ஒண்ணும் Permission கேக்க‌ வ‌ர‌லேல‌.

உல‌க‌த்துல‌ எவ்ளோ பொண்ணுங்க‌ இருந்தும் நான் ஏன் Jessiya Love ப‌ண்ணினேன்(ப‌ண்றேன்)???

:-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)

Saturday, January 23, 2010

My 2009 - An Overview

Tourism: MIAMI & KEY WEST
Work : November Release
Dish : VJ's Crab Curry, My Mutton Kulambu, Paddhu's Idly n Amma's Dosa's
Month : February
Place : 814, Town Colony,Middletown,CT,USA 06457
Song : Oru Vetkam Varuthe ( Pasanga), Vizhi Moodi(Ayan)
Movie(s) : Pasanga,Nadodigal, AVATAR, UPO n 3 IDIOTS
Best Movie: Pasanga
Website : Google and Orkut
Actor : R.Madhavan ( Yavarum Nalam)
Actress : Pooja ( Naan Kadavul)
Singers : Shreya Ghosal (Oru vetkam, Kannil kanum) ,
Dr.BalaMurali Krishna( Anbaale Azakaagum veedu)
Comedy : Parotta Kadai Comdey
Music Director: Ilayaraja (Naan Kadavul) , Harris(Ayan)
Director : Paandiyaraj ( Pasanga)
Comedian: Santhanam (Siva Manasula Sakthi)
Villain : Nandha ( Eeram)
Cinematography: MS Prabu (Ayan)
Incident : Swine Flu, Economic Crisis, Rs.50 against a $, Vacation to India(Feb), CAMRY, Telungana Crisis, Bi Elections in TN,Fight against water in Pocono River.
Dance : (Unanimous Decision) Deepak Maliakal ( Karikaalan, Dole Dole than)
Drive : on Key West Bridges , From Madurai Airport to Home
Mall : Tanger Outlet.
TV program : Yaavarum Nalam Serial
Medication : Manick's Hospitalization, ENT Visit
Bash : Srini's 'No More Bachelor' party
Cricketer : Virender Sehwag and Sachin Tendulkar
Tennis : Roger Federer
Cricket Match : India Vs Australia( 5th ODI at Hyderabad)
Tennis Match : US Open Final
20-20 Match : India - Srilanka (2nd Match at Mohali)

Learnt Lot in 2009. More importantly, i bought my car and license.

Friday, January 22, 2010

அம்மாவின் க‌ருப்ப‌ரிசி அல்வா (க‌வ‌ண் அரிசி)

*********************************************
அம்மாவின் க‌ருப்ப‌ரிசி அல்வா (க‌வ‌ண் அரிசி)
*********************************************

தேவையான‌ பொருட்க‌ள்:
************************
க‌ருப்பு அரிசி ‍ ‍ 2 க‌ப் (இந்தியாவில் கிடைக்கும்)
சீனி(ச‌ர்க்க‌ரை) 2.5 க‌ப்
தேங்காய் பூ 1 க‌ப்
முந்திரி தேவைக்கு(அல‌ங்க‌ரிக்க‌)


செய்முறை:
***********
1) க‌ருப்பு அரிசியை த‌ண்ணீரில் போட்டு ஒரு நாள் இர‌வு முழுதும் ஊற‌ வைக்க‌வும்.
2) அடுத்த‌ நாள் காலையில், ஊறிய‌ த‌ண்ணீரை கீழே கொட்டாம‌ல் த‌னியே எடுத்து வைத்துக்கொள்ள‌வும். பிற‌கு, ஊறிய‌ அரிசியை குக்க‌ரில் இட்டு, த‌னியே எடுத்து வைத்த‌ ஊறிய‌ நீரை அள‌ன்து கொட்ட‌வும். மொத்த‌ம், 2 க‌ப் அரிசிக்கு, 6 க‌ப் த‌ண்ணீர் சேர்க்க‌ வேண்டும்.ஊறிய‌ த‌ண்ணீர் 4 கப் எனில், மீதி 2 க‌ப் சாதார‌ண‌ த‌ண்ணீர் சேர்க்க‌லாம். குக்க‌ர் அடி பிடிக்காம‌ல் இருக்க‌ 2 தேக்க‌ர‌ண்டி நெய் விட‌லாம். குக்க‌ரில் 6 முத‌ல் 7 விசில் வ‌ரும் வ‌ரை கொதிக்க‌ விட‌வும்.
3)கொதித்த‌ அரிசி ஆறிய‌வுட‌ன், குக்க‌ரை திற‌ந்து, க‌ர‌ண்டி வைத்து அரிசியை ந‌ன்றாக‌ கிண்ட‌வும்.
4)இப்போது சீனியை போட்டு ந‌ன்றாக‌ கிள‌ற‌வும். த‌ண்ணீர் ப‌த‌ம் போய், அல்வா ப‌த‌ம் வ‌ரும்.
5)தேங்காய்ப் பூவை போட்டு ந‌ன்றாக‌ கிள‌ற‌வும்.2 நிமிட‌ம் க‌ழித்து முந்திரி போட்டு இற‌க்க‌வும்.


இத‌ற்கு 'க‌வ‌ண் அரிசி' என்ற‌ பெய‌ரும் உண்டு. செட்டி நாடு திரும‌ண‌ விழாக்க‌ளில் இது ஒரு முக்கிய‌ பதார்த்த‌ம்.

Tuesday, January 19, 2010

Aromale song(VTV) Translation

Vamalayenthi Varum Thennal, (O..Breeze blowing through the mountains.)

Puthu Manavalan Thennal, (O..Breeze, decked up like a bridegroom)

Palli Medayae Thottu Thalodi Kurushil Thoyuthu Varumbol, (Coming after worshipping the cross at the altar..)

Varavelpinu Malayala Kara Manasammatham Choriyum, (O Land of Kerala….grant permission for welcoming it..)

Aaromalae, Aaromalae, Aaromalae, Aaromalae…. (O Beloved….O Beloved…O Beloved…..O Beloved…)

Swasthi Swasthi Su Muhurtham, (On this very auspiciousness occasion )
Sumungali Bhava Manavatti (O Bride..,May you be blessed with a long wedded life)
Swasthi Swasthi Su Muhurtham, (On this very auspiciousness occasion )
Sumungali Bhava Manavatti (O Bride..,May you be blessed with a long wedded life)

Shyama Rathri Than Aramanayil, (In the inner sanctum of the dark evening…)
Mari Nilkayo Tharakame, (O star..why are you so reserved ? )
Pulari Manjillae Kathiroliyay, (Like a ray of light in the morning mist,)
Akalae Nilkayo Penmaname, (Are you standing afar…my lady ?)

Chanju Nilkuma Chillayil Nee,Chila Chilambuyo Poonkuyilae (O Koel..did you shake the bent branch of the tree ?..)

Manchinavilaee, Marayoliyae Thediyathiyo Poorangal (Did the festivities arrive with the flames of the mud lamps ?)

Swasthi Swasthi Su Muhurtham, (On this very auspiciousness occasion )
Sumungali Bhava Manavatti (O Bride..,May you be blessed with a long wedded life)

Aaromalae… Aaromalae…. (O Beloved….O Beloved….)

Kadalinae, Karayodiniyum Padan Sneham Undo ? (Does the sea still possess the love to serenade the shore ?)

Mezhukuthurikalayi Urukan Iniyum Praanayam Manasil undo ? (Is there still love in the mind..for melting like candle wax ?)

Aaromalae.. Aaromalaeee.. Aaromalaee (O Beloved….O Beloved…O Beloved…..O Beloved…)

Aaromalae.. Ohh.. Ho ! (O Beloved….)

Saturday, January 16, 2010

ப‌டித்த‌தில் பிடித்த‌து...க‌விக்கோ ப‌க்க‌ங்க‌ள்

இறைவா...
*********
* இறைவா...
நான் பாவம்
செய்கிறேன்...
அப்போதாவது
என்னை கவனிக்க மாட்டாயா? என்ற ஆசையில்

*இறைவன் படைக்க
விரும்பியதற்கு
காரணம் காதல்தான்

*கல்லிடம் கூட
கடவுளை காண்பவன்
மனிதனிடத்தில் காணமல் போவதேன்?

* இறைவா..
ஒவ்வோர் அழகும் உன்னிடம்
ஏறி வரும் படிகள்...

* பக்தியின் வெளிப்பாடு
பூசை ஆகாமல்
தொண்டு ஆகும்போது
இறைவன் தரிசனம் ஆகிறான்...

*இறைவா..
உன்னை காண ஆசை பட்டேன்...
கண்களையே திரை ஆக்கி விட்டாயே...

*இறைவா...
என் தேவைகளையெல்லாம் நிறைவேற்றிவிடாதே...
அப்புறம் உன்னை நான்
மறந்துவிடுவேன்....

*நாம் கடவுளை தேடுகிறோம்
கடவுள் நம்மை தேடி கொண்டு இருக்கிறார்...

*இறைவன் ஏன் ஒளிந்து இருக்கிறான்...
எதாவது குற்றம் செய்து இருப்பானோ?

*இறைவன் இசைக்கும் பாடலில்
பாவமும் ஒரு சுரம் தான்...

*இந்த காலத்தில்
வீடு கிடைப்பது
கஷ்டம் ஆகிவிட்டது
இறைவனுக்கும்....

-------------------------------------------------------
ஒரு தலை காதல்...
*******************
*உன்னை பார்க்கும் போதெல்லாம்
உளறுகிறேன்...
உலகம் அதை கவிதை என்கிறது...

*பிறர் இதயங்களில்
விருந்தாளியாகவே
தங்குகிராயே...காதலே...
உனக்கென்ன...வீடில்லையா?

*நான் உன்னருகில் இருக்கும் போது
என்னில் இருந்து தூரமாகவே இருக்கிறேன்...

*ரகசியத்தை காப்பாற்ற முடியாதவன்
கவிஞன்...

*புகைப்படம் ஏன் எடுக்கிறாய்...
ஒவ்வொரு இதயத்திலும் நீ வெவ்வேறு
ஓவியமாய் இருக்கிறாய்...

*மரணம்...
கனவுகளின் தொந்தரவு அற்ற தூக்கம்...

*மூளையின் தெருக்களில்
அலைந்து களைப்பு அடையும் போது
உன் நினைவு என்ற நிழலில்
இளைப்பாறுகிறேன்...

*மனம் அழுக்காகும் போதெல்லாம்
கவிதைகளில் நீரடுகிறேன்...

*காதல் தாகம்
கண்ணீர் குடித்தே அடங்கும்...

*உன்னை நேரில் கண்டால் கனவு
காண்கிறேன்..
கனவில் கண்டால் திடுக்கிட்டு
விழித்து கொள்கிறேன்....

* இசை கேட்டு வாழ்பவனுக்கு
புல்லாங்குழலின் வேதனை தெரியாது...

*உதடு கிடைக்காத புன்னகை நான்...

*உன் கண்ணை மீன்(கயல்) என்றார்கள்...
ஆனால்
அதுவோ வலை வீசுகிறது...

*உன்னால் எரிந்து போனவர்களின்
சாம்பலில் நீ கண் மை
தயாரிக்கிறாய்...

* என் எதிரில் நீயா..
இது கனவு எனில் நான் விழிக்க விரும்ப வில்லை...
இது நனவு எனில் நான் தூங்க விரும்ப வில்லை...

*பெண்
என்பவள் இலட்சியம் அல்ல...
வழிகாட்டி மரம்...
பலர்
அதன் அடியிலேயே
வசிக்க தொடங்கிவிடுகிறார்கள்...

* உன் நெற்றி பிறை பார்க்கும் போதெல்லாம்
நான் பண்டிகை கொண்டாடுகிறேன்

* பிரிவில் சந்திப்பின் ஏக்கம்
சந்திப்பில் பிரிவின் அச்சம்...
மனமே...உனக்கு
இரண்டிலும் நிம்மதி இல்லை...

* வீணைக்குள் சிறைப்பட்டு கிடக்கிறேன்...
உன் விரல்களை எதிர்பார்த்தபடி...
-------------------------------------------

--- க‌விக்கோ (ரகசியப்பூ

ப‌டித்த‌தில் பிடித்த‌து...க‌விப்பேர‌ர‌சு ப‌க்க‌ங்க‌ள்

த‌ண்ணீர் தேச‌த்தில் இருந்து...
****************************

ஆண் பெண்...
***********
ஆண் உடம்பில் ரத்தம் ஐந்தரை லிட்டர்
பெண் உடம்பில் ரத்தம் ஐந்து லிட்டர் என்ற
பேதம் இருந்தாலும்
செல்களின் செயல்கள் ஒன்றுதான்...
எனவே ஆணுக்கு தான் அதிக உரிமை...பெண்ணுக்கில்லை
என்ற பிற்போக்குத்தனத்திலிருந்து
வெளியே வாருங்கள்...

காதல் கடிதங்கள்...
****************
காதல் கடிதங்கள்..
உணர்ச்சியின் மத்தாப்புகளாய் இருப்பதுண்டே தவிர
உண்மையின் தீபங்களாக இருப்பது இல்லை...

ஒரு காதல் கடிதம் படிக்க படும் போதே
என்பது சதவீதம் கிழிக்க பட வேண்டும்....
மிச்சம் இருக்கும் இருபது சதவீதத்தில்
உணர்ச்சியின் வண்டலின் கீழே கொஞ்சம்
உண்மையும் உறைந்திருக்கும்...

உலகத்தில் காதல் கடிதங்கள் எல்லாம்
அழகானவை...
ஆனால் ஆரவாரமானவை....
நிலவில் ரத்தம் கசிவது போல...
மீசையோடு பிறந்த குழந்தை போல...
கவனம் ஈர்ப்பவை...
எதார்த்தம் மீறியவை...
--------------------------------------------------
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல
*******************************
அறிவாளியாய் இரு....
முட்டாளாய் நாடி...

கன்னகுழி அழகென்று புகழாதே..
அது
உன் சவகுழியாக இருக்கலாம்...

தும்மல்,காதல்
இரண்டையும்
வெட்கப்படாமல் வெளிப்படுத்து...
அடக்கினால்
வேண்டாத இடத்தில்
வெளிப்பட்டுவிடும்....

பயணமா?
பெட்டியிலும் வயிற்றிலும்
சிறிது இடம் இருக்கட்டும்....

பல் துலக்கும் போது
சீப்புக்கும் பல் துலக்கு...
தலையில் உள்ள மண்ணுக்கு
சாட்சி வேறு எதற்கு...?
------------------------------------------------
தமிழுக்கும் நிறம் உண்டு
**********************

பௌர்ணமி நிலவை பார்த்து கொண்டே
பாயை விரித்து படுக்க பிடிக்கும்...

எழுந்த பின்னே
போர்வைக்குள்ளே நுழைந்து
கொஞ்சம் தூங்க பிடிக்கும்

எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
இரவில் மட்டும் பாட பிடிக்கும்

பழைய பாடல்(ராஜா பாடல்) கேட்டு கொண்டே
படுக்கை மீது கிடக்க பிடிக்கும்..

நண்பர்கள் என்னை சுற்றி இருந்தால்
நரகம் கூட எனக்கு பிடிக்கும்...

நாளை என்பது வந்தால் வரட்டும்...
இந்த நிமிஷம் எனக்கு பிடிக்கும்....

கூட்டாஞ்சோறு சமைக்கும் போது குழந்தைகள்
சொல்லும் பொய்கள் பிடிக்கும்

பழக்கமில்லா பாவையர் சிந்தும்
பாதி சிரிப்பு பரவசம் பிடிக்கும்...

தனியாய் இருந்தால் பேச பிடிக்கும்...
சபையில் மௌனம் பிடிக்கும்...

எனக்கு பிடித்தது பிடிக்கும் என்ற
இதயங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும்...
--------------------------------------------
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல
*******************************
*பசித்தால் உணவு...
*படுத்தால் உறக்கம்...
*அடிக்கடி காதல் தோல்வி...
*மழை நாளில் சன்னல் ஓரம்...
*சேரிகள் இல்லாத இந்தியா
*மழிக்கவும் குளிக்கவும் அவகாசம்
*பெண்களின் சிரிப்பொலி
*எனக்கும் ஒரு காணி நிலம்
*கொடைக்கானல் அடிவாரத்தில் குடில்
*நனைவதற்கு சாரல்
*கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் எப்போதும் கவிதை மயக்கம்
*இளமைக்கு புதிய நண்பர்கள்
*முதுமைக்கு பழைய நண்பர்கள்
*நடுங்காத விரல்
*கடைசி வரைக்கும் சுகமாய் நீர் கழிக்கும் சுகம்
*உறக்கத்தில் உயிர் பிரியும் வரம்

க‌விப்பேர‌ர‌சு

ப‌டித்த‌தில் பிடித்த‌து...என் சகோதரிக்கு

முதிர்ந்த மழை நாளில்
தொலை காட்சி பார்ப்பவளை
தேநீர் கேட்டதற்காக
செல்லமாய் கோபிக்கும்
சிணுங்கலை ரசித்தது உண்டா நீ?

கூடபடிக்கும் கிராமத்து தோழியிடம்
'என் அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று
ஜாமண்ட்ரி பாக்ஸ் நிறைய
நாவல் பழம் வாங்கி வந்து
மண் உதிரா பழத்தை
ஊதி தரும் அன்பில்
உணர்ச்சி வசப்பட்டது உண்டா நீ...?

'என் அண்ணன்' என்றவள்
சக தோழிகளிடம்
அறிமுக படுத்தும்போது
வெட்கத்தால் மௌனித்து
தலை குனிந்து இருக்கிறாயா?

கிளி பச்சை என்றவள் ஆயிரம் முறை கூறியும்
பாசி கலரில் வளையல் வாங்கி வந்து
வசை பட்டு இருக்கிறாயா?

தென்னங் கீற்றுக்குள் சடங்கான வெட்கத்தில்
அவள் கன்னம் சிவக்கையில்
உனக்கும் அவளுக்கும் இடையே தோன்றிய
நுண்ணிய இழைகளை அறுத்தது உண்டா நீ?

மிக சாதாரணமாக கேட்டு விட்டாய் நண்பா...
'உனக்கென்ன அக்கா தங்கையா?
கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி தர ஒரே பையன்' என்று...
எனில் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிதர மட்டும் தான்
அக்கா தங்கையா?

நா.முத்துகுமார்( சில கேள்விகள்)

வேலைப் பளு

காலம் நெருக்குகிறது...
பணி திட்ட பட்டியலோ
தலை முதல் கால் வரை
என்னை பைத்தியமாய் விரட்டும்....

அவற்றை சரியான நேரத்திற்கு
வழங்க வேண்டும் என்பது
கவலை அளிக்கும் காரியம்..
அவர்கள் எதற்காவது தீர்வு
காண்பார்களா என்பது சந்தேகமே...

விடுமுறை நாட்களிலும்
இரவு நேரங்களிலும்
காத்திருக்கும் குடும்பம்
வெறுத்து சலித்து விட்டது...
'குடும்பம்' சண்டையிட
தயாராக இருக்கிறது...

கை அரிக்கிறது...
தலை முடியை பிய்த்து
கொள்ள முயன்றால்
அட அநியாயமே....
அங்கே முடியே இல்லை....

- அட்மிரல் மோகன் தன் பணி குறித்து(டாக்டர். அப்துல் கலாமின் அக்னி சிறகில்)

ப‌டித்த‌தில் பிடித்த‌து...நட்பு காலம்

தோழியும் தோழனும்>>>>
*******************

நீ வயசுக்கு வந்த போது
தடுமாறிய என்
முதல் கூச்சத்திற்கு
குட்டு வைத்து
நம் நட்பை
காப்பாற்றியவள் நீ...
--
உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டையில்
நல்ல வரிகள்
தேடி தேடி ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான என் கவிதை...
--
கண்களை வாங்கி கொள்ள
மறுக்கிறவள் காதலி ஆகிறாள்
கண்களை வாங்கி கொண்டு
உன்னை போல
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்...
--
போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்துவிடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நம் நட்பிருக்கு இல்லை...
--
தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது...

தாய்மைக்கான விதை
நட்பில் இருக்கிறது....

---

என் துணைவியும்..
உன் துணைவனும்
கேட்கும் படி
நம் பழைய மடல்களை
படித்து பார்க்க
வேண்டும் ஒரு
மழை நாள்..

எனது காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து
வைத்த போது
நீ
விழுங்கிய எச்சிலில்
இருந்தது
நமக்கான நட்பு...
---
அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்..உன் தோளில் நானும்
மாறி மாறி
தூங்கி கொண்டு வந்தோம்.
தூங்கு என்று
மனசு சொன்னதும்
உடம்பும் தூங்கிவிடுகின்ற
சுகம்
நட்புக்குத்தானே இருக்கிறது...
--
பேருந்து நிறுத்தத்திற்கு சற்று தள்ளி நின்று
பேசுகிறவர்கள் காதலர்கள்...
நிறுத்தத்திலேயே நின்று பேசுகிறவர்கள்
நண்பர்கள்...
--
உனக்கு மடல் எழுத
உட்காரும் போது மட்டும்தான்
அப்புறம் எழுதி கொள்ளலாம்
என்பதற்கான அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய் எனக்கு கிடைத்து விடுகின்றன...


உனது சிறிய பிரிவிற்கான
வலியைச் சமாதானப்படுத்தி கொள்வதற்காக
பெரிய பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள் நிறைந்த
அந்த
வானூர்தி நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு வந்தேன்...
--
குழந்தை பிறந்த செய்தி கேட்டு
ஓடோடி வந்த
கணவன்
குழந்தையின் முகத்தை பார்த்தான்..
நீ
என் முகத்தை
பார்த்தாய்...
----
காதலனோடு
பேசி கொண்டிருக்கையில்
தாவணியை சரி செய்தேன்...
நண்பனோடு
பேசி கொண்டிருக்கையில்
தாவணியை சரி செய்தான்...

-- அறிவுமதி(நட்பு காலம்)

ப‌டித்த‌தில் பிடித்த‌து -- சேலையோர பூங்கா

அவள் பேசுகிறாள்>>>>>>
****************

நீ என்னைக் காதலிக்க ஆரம்பித்து
இத்தனை நாட்கள் ஆகியும்
என்னிடம் காதலை சொல்லாமல்
நீ தவிப்பதை பார்த்து
என்ன இவன் இவ்வளவு
பயந்தாங் கொள்ளியாய்
இருக்கிறான் என்று
கவலை எல்லாம் கொள்ளவில்லை நான்...
காதலை சொல்ல இப்படி தவிக்கிறான் எனில்
கண்டிப்பாய் இதுதான் இவனுக்கு
முதல் காதலாய் இருக்கும் மகிழ்ச்சியில்
உன் தவிப்பை ரசித்து கொண்டு இருந்தேன்...

---

நீ இல்லாமல் உயிர் வாழ முடியாது என்று
நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன்...

நீ பிறந்து மூன்று வருடங்கள் கழித்து தானே...
நான் பிறந்தேன்...

அந்த மூன்று வருடங்கள்
நான் இல்லாமல்தானே
நீ உயிர் வாழ்ந்திருக்கிறாயே...

--
என்னடி ஆம்பளை மாதிரி
நகம் வளர்க்கிறாய் என்று
என்னை என் அம்மா
எத்தனை முறை திட்டினாலும்...
நான் இந்த நகத்தை மட்டும் வெட்ட போவதில்லை....

காரணம்...இந்த நகம் தான்
உன்னை முதன் முதலில் தொட்ட நகம்...

நான் தூங்குவதாக நினைத்து
நீ என் தலையை கொதிவிடுவதை
ஒரு அரை தூக்க நாளில்
நான் கண்ட பிறகுதான்
தூங்குவது மாதிரி
எப்படி நடிப்பது என்பதை
கற்று கொள்ள தொடக்கி விட்டேன்...

--
பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கும்
நம் மகள் என் தலை முடியை பார்த்து
என்னம்மா தலை எல்லாம் நரைத்துவிட்டது என்றதும்
குறுக்கே புகுந்த நீங்க...

இது நரையா...
முப்பது வருடங்களாய் மல்லிகை பூவை
சூடி சூடி இவள் கூந்தலும்
மல்லிகை பூவை மாறிவிட்டது என்றீர்கள்....

--
பக்கத்து வீடுகளில்
கணவன் மனைவி சண்டை
நடக்கும் போதெல்லாம்
என்னிடம் சண்டை போட தெரியாத
உன்னை கட்டி கொண்டு அழுவேன்....
என்ன செய்வது...

காதலை எனக்கு கண்ணீராக
சிந்தத்தான் தெரிகிறது.....

மண மேடையில்
உங்கள் கையை பிடித்தபடி
அக்னியை வலம் வந்த போது
யாருக்கும் தெரியாமல்
நீங்க என்னை கிள்ளியதை பார்த்துவிட்ட அக்னி சொன்னது...

இவன் உன்னை
கைவிட மாட்டான் என்பதற்கு
இந்த கிள்ளலே சாட்சி என்று....


-
நான் கண்ணை மூடி
கடவுளை வணங்கும் போது
என் கண்ணுக்குள்
நீ தெரிகிறாயே....
இதுதான் கணவனே
கண்கண்ட தெய்வம்
என்பதா...

-
உன் மீசை
என்னை தைக்கும் போதெல்லாம்...
என் வாழ்க்கை நெய்யப்படுகிறது...

-
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பி சாப்பிடும் போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகி விடுகிறது...

--
தாய்க்கு பின் தாரம் என்பது
பழமொழியாகவே இருக்கட்டும்...
என் கல்லறையில்
தாய்க்கு பின் கணவன் என்று
புது மொழி எழுதி வையுங்கள் ....

கட்டிக்க போறவனை
டேய் என்று கூப்பிடலாமா
என்று அதட்டுகிறாள் என் அம்மா...

கட்டிக்க போறவனைக்
கூப்பிடுவதற்கென்றே
கண்டுபிடிக்கப்பட்ட சொல்தானே டேய்...

என்னிடம் இருக்கும்
எந்த அழகு சாதனத்தை விடவும்
என்னை அழகாக்கிவிடுகிறது
உன் ஒற்றை பார்வை....

வேறு ஆண்கள் என்னை பார்க்கும்போது
முகத்தை திருப்பிக் கொள்ளும் நான்
நீ பார்க்கும் போது மட்டும்
குனிந்து கொள்கிறேன்...

இதிலிருந்து தெரியவில்லை...
நான் உன்னை தான்
காதலிக்கிறேன் என்று....

சோதிடர் என்ன நமக்கு
பொருத்தம் பார்ப்பது...
நீங்க என்னை பெண் பார்க்க வந்த போது
நான் காபி கொண்டு வந்த தட்டிலிருந்து
எந்த டம்ளரை நீங்க எடுக்க வேண்டும் என்று
நினைத்தேனோ
அதையே நீங்க எடுத்த போதே
நான் பார்த்து விட்டேன் பொருத்தம் ....

- தபூ சங்கர் (சேலையோர பூங்காவில் இருந்து)

தேவதையைக் கண்டேன்..

முதன்முதலாக
உனது விழி
கண்டேன்.
காணப் பெற்றேன்.
தூக்கம் தெளிந்தேன்.

உன்னுடன் உரையாடினேன்.
மொழிப் புலமை
பெற்றேன்.

உனது சுவாசம்
தீண்டப் பெற்றேன்.
மறு பிறவி எடுத்து
இவ்வுலகம் நுழைந்தேன்.

உனது குரலை
வளி வழி
கேட்டேன்!
தேனின் இனிமையைச்
செவியால்
சுவைத்தேன்.

உனது ‘முக’வரி
கண்டேன்.
எனது முகவரி
அறியப் பெற்றேன்.

உனது மூக்கின்
கூர்மை அறிந்தேன்.
தேக்கை பிளக்கும்
வலிமை உணர்ந்தேன்.

உனது கதிர் பார்வையைக்
கதிரவனும் கடன்
கேட்க விழைகிறேன்.

உனது பற்களின்
நிறம் கண்டேன்.
பசும் பால் வெளிர் மஞ்சள்
என விடை அளித்தேன்.

உனது மடியில்
துயில் கண்டேன்.
தலையணை என்ற
வார்த்தை மறந்தேன்.

உனது இதழின்
வடிவம் கண்டேன்.
வாழ்க்கையின் தத்துவம்
உணர்ந்தேன்.

உனது கூந்தல்
மணம் முகர்ந்தேன்.
சவ்வாதின் குறையைக்
கண்டுபிடிடத்தேன்.

உனது புருவத்தின்
வளைவு கண்டேன்.
கருப்பு வானவில்
காணக் கிடைத்தேன்.

உனது இமைகளின்
சிணுங்கலை ரசித்தேன்.
மி்ன்னலின் கால அளவை
எளிதில் கணித்தேன்.

இவ்வாறு...
பல்சுவைத் தேனைப்
பதமாகப் பரிமாறிய
உன்னை என்
'அம்மா' என்கிறேன்.
அன்பின் பண்பினை
நிறைவாகப் பெறுகிறேன்.

- ந.விஜய செல்வம்.

காத(லி)ல் கவிதையில்லை...

அவ‌ள் பேசுகிறாள் >>>>>

உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய்
நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில்
நீ காதலைச் சொன்னாய்-
நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்...

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய்
உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை
காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை
அதுவும் தேவைப்பட்டது-
நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்..
நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர்
சிறுகுஞ்சாய்....

ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம்
பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்
ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து
நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்..
நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்..

நான் எதி்ர்பார்த்ததைப்போல
என் பலவீனம் உன் பலமாய்
நீ என்னிலிருந்து விலகிப்போனாய்
நான் துடுப்பிழந்த படகானேன்

வெகு நாள் கழித்து
திடீரென ஓர் கவிதை
பாலையின் கொடும்மணல் சூட்டில் வந்துவிழுந்த
மழைத்துளியாய்- அங்குமீண்டும் ஓர்
கள்ளிச்செடி துளிர்க்காரம்பித்தது....

காதல் எல்லையில்லா பிரபஞ்சம்
கவிதை காதலிலிருந்ததது...

காதல் கவிதையில்லை.

----ரிஷி சேது

அவள் ???

இந்நேரம் குளித்து முடித்து
திருப்பாவை சொல்வாளோ
வாயில் பிரஷுடன்
துவைக்கிற கல்லில் அமர்ந்து
கனவு காண்பாளோ
தம்பிக்கு அல்ஜிபிரா
சொல்லித் தருகிறாளோ
தங்கையோடு
தலையணை யுத்தம்
நடத்துகிறாளோ
எஃப்.எம். பாட்டோடு
பின்பாட்டுப் பாடுகிறாளோ
இன்னும் காலாட்டிக் கொண்டே
தூங்குகிறாளோ
என்ன செய்து கொண்டிருப்பாள்..?
தரகர் காட்டும்
போட்டோவில் இருக்கும் அவள்...

செய்வோம் ஒரு காதல்...

உன்னைப் பார்த்த போதெல்லாம்
என் கண்கள்
குருடாகின
பிறரைப் பார்க்காமல்.....

உன்னைத் தவிர
பிறரிடம் பேசிய
போதெல்லாம்
என் நாக்கு
ஊமையாகியது

நீ பேசிய போதெல்லாம்
என் செவிகள்
கேட்க வில்லை
பிறர் பேசும் வார்த்தைகளை....

தாயின் மடி தேடும்
மழலை போல....
உன்னைப் சுற்றியே
என் உலகம் உறவாடியது......

விதி.....
நம்மைப் பிரித்தது....

இப்போது...
நான் பணி
காரணமாக...

பனி, முனி போல்
உக்கிரம் கொண்டு
பொழியும் தேசத்தில்....


நினைத்ததை விட
எல்லாம் சிறப்பாகவே உள்ளது...

கேட்டதை விட
அதிகம் கிடைக்கிறது....

சிரிப்பு வருகிறது.
சிரிக்க முடியவில்லை....

அழுகை வருகிறது.
அழ முடியவில்லை....

எதிரில் பேசும் பேச்சு
கேட்கிறது....
அதற்கு பதில்
பேச முடியவில்லை....

குளிர் தெரிகிறது...
ஆனால் குளுமை தெரியவில்லை...

மழை பெய்கிறது....
மண் மணக்கவில்லை

பரபரப்பாக வாழ்க்கை
செல்கிறது....

பதமாக பேச
நேரமி்ல்லை....

ஒரு நிழல் உலகம்
என்னைச் சுற்றி
உலாவுகிறது....

எப்போதும் உன்
நினைப்பாக இருந்த என்
இதயம்...
மூளையின் பேச்சினைக் கேட்டு
மெல்ல மெல்ல அழிக்க
ஆரம்பித்தது...

எல்லாம் இந்த
மென் பொருள்
செய்யும்
வன் விளையாட்டு...

மனதோடு சேர்ந்து வாழ
பணம் சிறிது
தேவையான
இவ்வுலகில்....

அன்பினை... காதலை...
பாசத்தை.... நட்பினை...
நினைவு கொள்ள....

ஒரு திருவிழா....

காதலர் தினம்.

தொடர்வோம் பழைய காதலை...
செய்வோம் புதிய காதலை..

அன்பே சிவம்....

- ந.விஜய செல்வம்

ஆதலால்.... காதல் செய்.

எங்கிருந்து வந்தாயடி....

இடது விழியில் தூசி
விழுந்த ஒரு கண நேரத்தில்
என் நாசி நிற்பதுபோல்
என் வலம் கடந்து சென்றாயே.....

சூரியனைக் கண்டால் மட்டும்
பொன்முகம் காட்டும்
சூரிய காந்தி போல்,
வசீகரன் என்னைக் கண்டால் மட்டும்
பூமுகம் காட்டும் என்
சாமந்திப் பூவே.....


உண்ணும் போது....
தேனீர் அருந்தும் போது....
பேருந்தில் பயணிக்கும் போது...
கோவிலுக்குச் செல்லும் போது....
கடற்கரையில் நான்
காற்றுக்கு காத்திருக்கும் போது......
பண்பலையில் எனக்குப்
பிடித்த பாடல்
ஒலிபரப்பும்போது.......
இவை எல்லாம் எனக்கு
நிகழும் போது...
நீ என் முன் தோன்றுவது
இயல்பாகிறது....

என் கண்ணில் நீ
விழுந்தது விதி....

இது
'காக்க காக்க' போல்
வந்த காதலா!

இல்லை...
நோக்க நோக்க
வந்த காதலா!
புரியவில்லை....
புரியவும் தேவையில்லை.....

நிஜத்தில் நீ என்னிடம்
பேச நினைத்ததெல்லாம்....
உன் கனவில் பேசுகிறேன் என
என் கனவில் நீ கூறுகிறாய்...
என்ன கனவு இது....
கனவில் கூட நம்
நினைவுகள் நிஜமாகிறது....

நீ என்னை காதலிக்க
சில காரணங்கள்...

எனக்கு....

சீப்பில் வாரும்
முடியை விட....
சீப்பில் வரும்
முடிகள் அதிகமாகிறது.....


வெள்ளிக் கம்பிகள்
அதிகமாவதால்...
பங்குச் சந்தையில்
வெள்ளியின் மதிப்பு
குறைகிறது......

மீசை வளர்ந்து வளர்ந்து
தாடியின் நீளம் அதிகரிக்கிறது


குழி விழுந்த கண்கள்
குவி வில்லைகளைத் தேடுகிறது......

தொலைக்காட்சியில்
சமையல் குறிப்புகளை
குறிப்பெடுக்கச் செய்கிறது.....

எல்லாவற்றுக்கும் மேலாக...
நங்கை உன் கூந்தலுக்கு
வாங்கி வைத்த
நட்சத்திரப் பூக்கள்
வாடுகிறது....

இது
ஜாதகம்,சாதகம்,பாதகம் பார்த்து
வந்த காதல் அல்ல...

பிறந்த ஜாதியைப் பார்க்காமல்
சிறந்த பாதியாக நீ எனக்கு வர
வந்த காதல்....

ஆதலால்....
காதல் செய்.


ந.விஜய செல்வம்.

குடைக்குள் நாம்..

இது கவிதை அல்ல... ஒரு கதைக்கான விதை.
*********************************************
குடைக்குள் மழை.
ஆம்.
என் உள்ள
குடைக்குள்!

குடை பிடிக்கிறாய்.
வெயிலிலிருந்து
உன்னைக் காக்க.
இதனால்
மடை கடந்து
வெள்ளம் பாயும்
என் இதயத்தை
யார் காக்க?

குடை பிடித்தால்
காளை மி்ரளுமாம்!
யார் சொன்னது?
பொய்.
இந்த காளை மட்டும்
உன் குடையால்
ஈர்க்கப்படுகிறதே!

வெயிலை நினைத்து
குடையுடன் நடக்கிறாய்.
உன்னை நினைத்து
உன் பின் தொடர்ந்து
வெயிலில் வந்து
வியர்வை
மழையில் நனைகிறேன்.

குடை உனக்கு
காவல்!
உன் மீது எனக்கு
காதல்!
இனி
உன் குடைக்கும்
நானே காவல்

மகளிரே...!
நிறுத்துங்கள்...
குடை பிடிப்பதை

குடை
எங்கள்
காதல் தேர்தலின்
சின்னம்.
இத்தேர்தலில்
போட்டியிடும் உரிமை
என் தலைவிக்கு மட்டுமே!

இறுதியில்
வெற்றி பெறுவது
எம் காதல் மட்டுமே!

- ந.விஜய செல்வம்

ஒரு த‌ல‌ காத‌ல்...

விளையாட்டாக பேருந்தில் உன்னைத்
திரும்பித் திரும்பிப் பார்த்தேன்....

விசை மி்கக் கொண்டு ஒரு
திங்களில் என் இதயம் புகுந்தாய்...

விவரம் அறியாத வயதில்
திருமணம் பற்றி சிந்தித்தேன்...

விக்கிரமாய் தெரிந்த உன்னைத்
திசைகள் எட்டிலும் கண்டேன்!

விஜய்க்கும் உனக்கும் உள்ள பொருத்தத்தில்
திருப்தி இல்லை காதல் கடவுளர்க்கு...

வினைப் பயன் என இதனைக் கருதி
திரும்பிப் பாராது நடக்கிறேன்.

வழக்கமாக
காதலர்கள் இறந்து
காதல் வாழும். ஆனால் இங்கு...

காதல் இறந்து
காதலி வாழ்கிறாள்.....

அவளைப் பார்க்கும்போதெல்லாம்
குற்ற உணர்வு!
கொலைக் குற்ற உணர்வு....???

ஆம்...!
நானும் கொலைகாரன்தான்....?
அவள் மீது கொண்ட
காதலைக்
கருணை இல்லாது
கொன்றதால்...
கொலைக் குற்றத்திற்குத்
தூக்கு தண்டனை.
என் மனதைக்
கொலை செய்த
உனக்கு
என்ன தண்டனை????

காதலியே...! மன்னிக்கவும்....
பெண்ணே....
என் காதலின் இறுதி ஊர்வலத்தில்
புன்னகைப் பூக்களை
புன்முறுவலுடன் வீசுகிறாயே! ஆனால்
இக்கல்லறைப் பூக்களின்
மணம் முகர
என் காதலுக்கு
இன்று உயிரில்லை!

நீ என்றும்
நீடூழி வாழ்க!

விதி
செ(சொ)ல்லும் வழியில்
செல்கிறேன்!

போய் வா(ராதே) மகளே!

- ந.விஜய செல்வம்

பட்டுக் கவிதைகள்

ஒரு
சித்திரைப் பொங்கலன்று
கால் கொலுசுகளின் மெட்டுடன்
நெற்றியில் அம்மனின்
குங்குமப் பொட்டுடன்
உதடுகளில் என்னைப்
பாடும் பாட்டுடன்
பசும் பட்டு உடுத்தி
வரும் அழகர் போல்
அழகான
என் வாழ்வில்
பசுமை கூட்ட,
அழகாக
பச்சைப் பட்டுத் தாவணி
உடுத்தி வந்தாள்
அரசி அவள்....


ஒரு அழகான
செவ்வான
மாலை பொழுது...

திடீரென
கரும்
மேகங்களைக் கொண்டு
வெண்
மழை பொழிய
ஆரம்பித்தது.

காரணம்
என்னவெனில் அங்கே
வெண்
குடையுடன்
கரும்
பட்டு உடுத்தி
மழை வெள்ளம்
போல் வந்தாள்
செந்நிற
என் மழை
அரசி.

எங்கள் வீட்டில்
காதலுக்கு சம்மதம்
கிடைக்கவில்லை.
பின்னாளில்
கிடைத்தது.
என்னவென்று
என் பெற்றோரிடம்
கேட்டேன்.
'உன் கலையரசி
வெண்
பட்டில் வந்து
உங்கள் காதலுக்கு
கோரிக்கை விடுத்தது
கலை மகளே
வந்து கோரியது போல்
இருந்தது.
அதனால்'
என்றனர்.

-ந.விஜய செல்வம்

வளையல் கவிதைகள்...

விலை ஏதும் கேட்காமல்
விரும்பினேன் என்பதற்காக
வில்லிபுத்தூரில் பிறந்த
வஞ்சி என்
வெண் கைகளுக்கு
வளையல் வாங்கி
வந்தான் வசீகரன்.

எனக்கு
சில கவிதையான
விசயங்கள்....
மழையின் மண் வாசம்...
அம்மாவின்
ஆட்டுக்கறி குழம்பு...
சென்னையில்
பேருந்து பயணம்...
மாதவனின் வெண் சிரிப்பு...
ரேணு குட்டியின் வெகுளி தனமான கேள்விகள்/கோபங்கள்...
இவைகளுடன்...
வசீகரன் தந்த
வளையல்...

வழக்கமாக குயிலோசை
கேட்டு மட்டும்
காலையில் எழும் நான்...
இப்போதெல்லாம்
வசீகரனின் வளையலோசை
கேட்டு மட்டுமே
எழுகிறேன்.

ஒரு அழகான
மஞ்சள் வெயில்
நண்பகல் பொழுது
தென்னை சூழ்ந்த
என் வீட்டில்
வெட்கம் சூழ்ந்த
வஞ்சி என் வெண்
கைவிரல்கள் பிடித்து
அணிந்து விட்டான்
வளையலை வசீகரன்.

எனக்கு மட்டும்
வானவில்
முழுவட்டமாக மஞ்சளாக
தெரிகிறது.
வசீகரன் தந்த
வளையல் வண்ணம்.

ஒலிம்பிக் கொடியில் உள்ள
ஐந்து வளையங்கள்
ஐந்து கண்டங்களின்
ஒற்றுமை விளக்க.
ஓவியம் போல் உள்ள
வஞ்சி என் கைகளில் உள்ள
இரு வளையல்கள்
எம் இருவரின்
ஒற்றுமை விளக்க.

இதற்கு முன்
எப்போதும் உணவு
உண்ட பொதேல்லாம்
அதன் சுவை
உணரவில்லை.
ஆனால்,
வசீகரனின் வளையல்
அணிந்த பிறகு
உணவின் சுவை
உயர்ந்தது அமுது போல.

மழை நாளில்
செல்லும் போதெல்லாம்
குடை எடுத்துச்
செல்வது வழக்கம்.
இப்போது
வசீகரனின் வளையலே
வ(லை)ளையாக இருப்பதால்
குடை தேவைப்படுவதில்லை.

என் வீட்டு
ஊஞ்சலில் உள்ள
வளையம் ஒன்று
அறுந்ததால்
வசீகரன்
தந்த
வளையல் ஒன்று
மாட்டி
ஆடுகிறேன்
ஒரே பாய்ச்சலில்.

பிட்டுக்கு மண்
சுமந்தான் சிவன்.
என்னுடன் வாழ்வதற்கு
வளையல் வாங்கினான்
வசீகரன்.

விரிவுரையாளர் வசந்தா
வகுப்பில்
விலங்கியல் பாடம்
விளக்கும்போதெல்லாம்
வஞ்சி எனக்கு
வசீகரன்
வளையல் பற்றி
விளக்குவதாகவே
விளங்குகிறது

அதிகாலையில்
சன்னல் வழி
கதிரவனின் கதிரொளி
வந்த பின்
கண் விழிக்கும்
நான்
வசீ வளையல்
வந்த பிறகு
அதன் செவ்வொளியிலே
விழிக்கிறென்.

வீட்டு வாசலில்
வந்தாரை வரவேற்க
கட்டினேன்
மாவிலைத் தோரணம்.
பின்னாளில்
கட்டினேன்
மாவளைத் தோரணம்
வசீகரனை வரவேற்க.

குழந்தை வேண்டும்
என்று மகளிர்
கோவில் வாயிலில்
கட்டினர்
தொட்டில்.
வசீகரனின்
வாழ்க்கை வேண்டும்
என்று கலைமகள்
நான் மாட்டினேன்
வளையல் என்
மணிக்கட்டில்.

இந்த கோடை
காலத்திலும்
என் வாழ்வில்
வசந்தம்
வசீகரன் வளையல்
தந்ததால்.

மருத்துவர்
ஆகவில்லை எனில்
என்ன செய்து இருப்பாய்
என என் தோழி
கேட்டாள்.
வளையல் விற்கும்
வளையல்காரியாக
மாறியிருப்பேன் என்றேன்
அசட்டுத்தனமாக.

வீட்டில் பூஜையில்
கடவுளுக்கு ஆரத்தி
எடுக்கும் போது
அடிக்க மணிகள்
இல்லாததால்
வசீகரன் தந்த
வளையல் மணிகள்
மூலமாகவே
நடத்துகிறேன் பூஜையை.

ஒரு நாள் இரவு
வசீயுடன் செல்லிடைப்
பேசியில் பேசிக்
கொண்டு இருந்த போது
கால்கள் இடறி
கல்லூரியின் மூன்றாவது
மாடியில் இருந்து
கீழே விழுந்தேன்.
ஒரு
மரக் கிளை
வசீகர வளை
கொண்ட கரம் பிடிக்க
உயிர் பிழைத்தேன்.

சிறு வயதில்
உடல் நலம் இல்லை
எனில்
மருத்துவரிடம்
செல்வது வழக்கம்.
இவ்வயதில்
உடல் நலம் இல்லை
எனில்
வசீயின் வளையல்
அணிவது வழக்கம்.

ஒரு பெளர்ணமி்
ஆடி வெள்ளியன்று
மகாலட்சுமி் போன்ற
மங்கை என்
கரங்களில்
வந்தது வசீ தந்த வளையல்.
அன்று முதல்
திகழ்கிறது
என்
சுற்றுப்புறமும் வீடும்
லட்சுமி் 'கரமாக'.

ந.விஜய செல்வம்

பொட்டு கவிதை....

தினம் நான் பல நிறங்களில் பௌர்ணமி காண்கிறேன்...
ஆமாம்...
உன் நெற்றியில் உள்ள பொட்டு தான்...

அது என்ன...
உனது நெற்றியில் மட்டும்
பூக்கள் பூக்கின்றன...
ஒ...
உனது பொட்டுகளின் வடிவங்களோ...

சிவனுக்கு மட்டுமா மூன்று கண்கள்...
பார்வதி தேவி போன்ற உனக்கும்
மூன்று கண்கள் தான்....
நீ பொட்டு வைத்து வரும் போது.....


ஒரு நாள் பொட்டு வாங்கி தந்தேன்...
குடையும் வேண்டும் என கேட்டாய்...
புரியாமல் முழித்தேன்....
உன் பொட்டு வைத்த நெற்றி
வெயில் மழையில் பட கூடாது என்றாய்...

கோவிலுக்கு நான் வரும் போது
நீதான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்றாய்...
ஏன் என்றேன்...
நெற்றி தொடும் அர்ச்சகர் கூட
நீயாக இருக்க வேண்டும் என்றாய்....

உன் வளையல் ஓசை கேட்டு
காலையில் விழிக்கும் நான்...
உன் செந்தூரம் பார்த்தே
சூரியனை காண்கிறேன்...அவ்வளவு பிரகாசம்...

திரு நீறு பூச வேண்டாம்...
தழும்பு வரும் என்றேன்...
நீ வைத்த பொட்டினை
அழியாமல் காப்பது இதுதான் என்றாய்...

நான் தினமும் கும்குமம் வைத்து விடுகிறேன்
என்பதற்காக....
கும்கும பூ கூட பாலில் கலந்து
குடிக்க கூடாது என்கிறாய்...

நான் வைக்கும் பொட்டின் மீது
அவ்வளவு காதலா....
நெற்றியில் முத்தம் தர
கூடாது என்கிறாய்...

ஒரு நாள் வீட்டில்
கும்குமம் தீர்ந்து விட்டது...
நாம் இருவரும் அறியவில்லை....
காலையில் குளித்தவுடன்
கும்குமம் வைத்தே ஆக வேண்டும் என
அடம் பிடித்தாய்...அழ ஆரம்பித்தாய்....
சமையலறையில்
மிளகாய் பொடி எடுத்து வந்து
நெற்றியில் வைக்க சொன்னாய்....
உன் அறியாத வெகுளி தனத்தை
நான் என்ன சொல்வது...

உன் இடது புருவம்
நெற்றியில் முடியும் இடத்தின் அருகில்
ஒரு மச்சம் இருந்தது
கடுகு அளவில்...
நான் வைத்து விடும் பொட்டு தவிர
வேறு எந்த சுவடும்
நெற்றியில் இருக்க கூடாது என கூறி
சிகிச்சை பெற்று
அதை மறைத்து விட்டாய்...

சிறு வயதில் என் சகோதரியிடம்
பொட்டு வைத்து விடு
என அடம் பிடிப்பேன்...
நீ பொட்டு வைக்க அடம் பிடிக்கும் போது
அந்த நினைவுகள் தான் வருகின்றன...

- ந. விஜய செல்வம்

புரியிற‌ மாறி இருக்கு...ஆனா புரிய‌ல...


******************************************************************************
இந்த கவிதை பொருள் புரிந்தவர்கள், கவிதையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள்...........
******************************************************************************
அருவி விழும் மலை மீது கயிற்றில்
நடக்கும் சாகச வீரன் நான்.
வளர்ப்பு பிராணியாகி அருவி
என் காலடியில் விழுகிறது....
ஒரு போதும் தவறியதில்லை நான்
அருவி விழும் மர்மத்தை
சிறு வயதில் தொலைத்து விட்டேன்.
என் வயோதிகம் வரும் வரை
கயற்றின் மீது நடப்பேன்
ஒரு முறை வித்தை மறந்து
அருவி விழுங்கும் வரை.....
அப்போது
தூர்ந்த கயிறு
சர்ப்பமென அருவிக்குள் மிதக்கும்.
அருவி
தன் மர்மத்தை மீட்ட
ஆர்ப்பரிப்பில் மீண்டும் விழும்...

--- சுஜாதா (கற்றதும் பெற்றதும்)
****************************************************************************

E = MC2 கூட‌ ந‌ல்லா புரியுது சார்...மேல‌ உள்ள‌ க‌விதைய‌ த‌ண்ணி அடிச்சு...சாரி குடிச்சுட்டு ப‌டிச்சா கூட‌ புரிய‌ல‌...ப்ளீஸ்...ப‌டிச்சு சொல்லுங்க‌...

தேவ‌தை ப‌க்க‌ம்...























நீ முணுமுணுத்து கும்பிடும் அழகைக்
கெடுக்கும் விதமாய் மணி அடிக்கும் பூசாரியைக்
கோபமாய் அந்த சாமி சிலை முறைப்பது
போல் தெரிகிறதெனக்கு...

நெற்றியில் பூசி விட்டு கோயில்
தூணில் நீ தட்டி விட்டுப் போகும் திருநீற் திட்டில்
சாமி எழுவதாய் தெரிகிறது..

நீ கடித்து மிச்சம் வைத்த
தேங்காய் சில்லை திருட வரும்
எலியை விரட்ட ஒரு பூனையை அந்த இடத்திற்கு
அந்த பிள்ளையார் அனுப்பி வைப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்...

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட
சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று தான்
நான் தினமும் அந்த ஆற்றங்கரைப் பிள்ளையார் காலில்
விழுந்து கும்பிட்டுச் செல்கிறேன், உன்னையும்
என்னையும் சேர்த்து வைக்கும் படி..

உனக்கு என்னைப் பிடிக்கும் என்பதை
அந்தக் கடவுளிடம் சொல்லி விடாதே அப்புறம்
கோபத்தில் திரும்பி உட்கார்ந்து கொள்வான், பாவம்
நம் ஊர் மக்கள்...

நீ சாமி கும்பிடும்
அழகைப் பார்க்கவே கோயிலுக்கு வருகிறேன், தினமும்..

இன்னும் கொஞ்ச நாள் போனால்
நீ வரும் நேரம் தான் நடை திறக்கும் நேரம்
என்று மாற்றச் சொல்லி அந்த பூசாரியைக்
கனவில் கடவுள் மிரட்டுவார் என்றே நினைக்கிறேன்.

- காதல் தேவன்

ஒப்புத‌ல் வாக்குமூல‌ம்




























நான் ந‌ல்ல‌வ‌ன் இல்லை

என்ப‌த‌ற்கு மூன்று உதார‌ண‌ங்க‌ள்...

1) நான் க‌விதை எழுதுகிறேன்.

2) அதை கிழிக்காம‌ல் வைத்துக் கொள்கிறேன்.

3) அதை உங்க‌ளுக்கு ப‌டிக்க‌ கொடுக்கிறேன்.

‍‍‍‍‍நா.முத்துக்குமார்