
நீ முணுமுணுத்து கும்பிடும் அழகைக்
கெடுக்கும் விதமாய் மணி அடிக்கும் பூசாரியைக்
கோபமாய் அந்த சாமி சிலை முறைப்பது
போல் தெரிகிறதெனக்கு...
நெற்றியில் பூசி விட்டு கோயில்
தூணில் நீ தட்டி விட்டுப் போகும் திருநீற் திட்டில்
சாமி எழுவதாய் தெரிகிறது..
நீ கடித்து மிச்சம் வைத்த
தேங்காய் சில்லை திருட வரும்
எலியை விரட்ட ஒரு பூனையை அந்த இடத்திற்கு
அந்த பிள்ளையார் அனுப்பி வைப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்...
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட
சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று தான்
நான் தினமும் அந்த ஆற்றங்கரைப் பிள்ளையார் காலில்
விழுந்து கும்பிட்டுச் செல்கிறேன், உன்னையும்
என்னையும் சேர்த்து வைக்கும் படி..
உனக்கு என்னைப் பிடிக்கும் என்பதை
அந்தக் கடவுளிடம் சொல்லி விடாதே அப்புறம்
கோபத்தில் திரும்பி உட்கார்ந்து கொள்வான், பாவம்
நம் ஊர் மக்கள்...
நீ சாமி கும்பிடும்
அழகைப் பார்க்கவே கோயிலுக்கு வருகிறேன், தினமும்..
இன்னும் கொஞ்ச நாள் போனால்
நீ வரும் நேரம் தான் நடை திறக்கும் நேரம்
என்று மாற்றச் சொல்லி அந்த பூசாரியைக்
கனவில் கடவுள் மிரட்டுவார் என்றே நினைக்கிறேன்.
- காதல் தேவன்
No comments:
Post a Comment