இது கவிதை அல்ல... ஒரு கதைக்கான விதை.
*********************************************
குடைக்குள் மழை.
ஆம்.
என் உள்ள
குடைக்குள்!
குடை பிடிக்கிறாய்.
வெயிலிலிருந்து
உன்னைக் காக்க.
இதனால்
மடை கடந்து
வெள்ளம் பாயும்
என் இதயத்தை
யார் காக்க?
குடை பிடித்தால்
காளை மி்ரளுமாம்!
யார் சொன்னது?
பொய்.
இந்த காளை மட்டும்
உன் குடையால்
ஈர்க்கப்படுகிறதே!
வெயிலை நினைத்து
குடையுடன் நடக்கிறாய்.
உன்னை நினைத்து
உன் பின் தொடர்ந்து
வெயிலில் வந்து
வியர்வை
மழையில் நனைகிறேன்.
குடை உனக்கு
காவல்!
உன் மீது எனக்கு
காதல்!
இனி
உன் குடைக்கும்
நானே காவல்
மகளிரே...!
நிறுத்துங்கள்...
குடை பிடிப்பதை
குடை
எங்கள்
காதல் தேர்தலின்
சின்னம்.
இத்தேர்தலில்
போட்டியிடும் உரிமை
என் தலைவிக்கு மட்டுமே!
இறுதியில்
வெற்றி பெறுவது
எம் காதல் மட்டுமே!
- ந.விஜய செல்வம்
No comments:
Post a Comment