*********************************************
அம்மாவின் கருப்பரிசி அல்வா (கவண் அரிசி)
*********************************************
தேவையான பொருட்கள்:
************************
கருப்பு அரிசி 2 கப் (இந்தியாவில் கிடைக்கும்)
சீனி(சர்க்கரை) 2.5 கப்
தேங்காய் பூ 1 கப்
முந்திரி தேவைக்கு(அலங்கரிக்க)
செய்முறை:
***********
1) கருப்பு அரிசியை தண்ணீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுதும் ஊற வைக்கவும்.
2) அடுத்த நாள் காலையில், ஊறிய தண்ணீரை கீழே கொட்டாமல் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, ஊறிய அரிசியை குக்கரில் இட்டு, தனியே எடுத்து வைத்த ஊறிய நீரை அளன்து கொட்டவும். மொத்தம், 2 கப் அரிசிக்கு, 6 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.ஊறிய தண்ணீர் 4 கப் எனில், மீதி 2 கப் சாதாரண தண்ணீர் சேர்க்கலாம். குக்கர் அடி பிடிக்காமல் இருக்க 2 தேக்கரண்டி நெய் விடலாம். குக்கரில் 6 முதல் 7 விசில் வரும் வரை கொதிக்க விடவும்.
3)கொதித்த அரிசி ஆறியவுடன், குக்கரை திறந்து, கரண்டி வைத்து அரிசியை நன்றாக கிண்டவும்.
4)இப்போது சீனியை போட்டு நன்றாக கிளறவும். தண்ணீர் பதம் போய், அல்வா பதம் வரும்.
5)தேங்காய்ப் பூவை போட்டு நன்றாக கிளறவும்.2 நிமிடம் கழித்து முந்திரி போட்டு இறக்கவும்.
இதற்கு 'கவண் அரிசி' என்ற பெயரும் உண்டு. செட்டி நாடு திருமண விழாக்களில் இது ஒரு முக்கிய பதார்த்தம்.
No comments:
Post a Comment