Saturday, January 16, 2010

செய்வோம் ஒரு காதல்...

உன்னைப் பார்த்த போதெல்லாம்
என் கண்கள்
குருடாகின
பிறரைப் பார்க்காமல்.....

உன்னைத் தவிர
பிறரிடம் பேசிய
போதெல்லாம்
என் நாக்கு
ஊமையாகியது

நீ பேசிய போதெல்லாம்
என் செவிகள்
கேட்க வில்லை
பிறர் பேசும் வார்த்தைகளை....

தாயின் மடி தேடும்
மழலை போல....
உன்னைப் சுற்றியே
என் உலகம் உறவாடியது......

விதி.....
நம்மைப் பிரித்தது....

இப்போது...
நான் பணி
காரணமாக...

பனி, முனி போல்
உக்கிரம் கொண்டு
பொழியும் தேசத்தில்....


நினைத்ததை விட
எல்லாம் சிறப்பாகவே உள்ளது...

கேட்டதை விட
அதிகம் கிடைக்கிறது....

சிரிப்பு வருகிறது.
சிரிக்க முடியவில்லை....

அழுகை வருகிறது.
அழ முடியவில்லை....

எதிரில் பேசும் பேச்சு
கேட்கிறது....
அதற்கு பதில்
பேச முடியவில்லை....

குளிர் தெரிகிறது...
ஆனால் குளுமை தெரியவில்லை...

மழை பெய்கிறது....
மண் மணக்கவில்லை

பரபரப்பாக வாழ்க்கை
செல்கிறது....

பதமாக பேச
நேரமி்ல்லை....

ஒரு நிழல் உலகம்
என்னைச் சுற்றி
உலாவுகிறது....

எப்போதும் உன்
நினைப்பாக இருந்த என்
இதயம்...
மூளையின் பேச்சினைக் கேட்டு
மெல்ல மெல்ல அழிக்க
ஆரம்பித்தது...

எல்லாம் இந்த
மென் பொருள்
செய்யும்
வன் விளையாட்டு...

மனதோடு சேர்ந்து வாழ
பணம் சிறிது
தேவையான
இவ்வுலகில்....

அன்பினை... காதலை...
பாசத்தை.... நட்பினை...
நினைவு கொள்ள....

ஒரு திருவிழா....

காதலர் தினம்.

தொடர்வோம் பழைய காதலை...
செய்வோம் புதிய காதலை..

அன்பே சிவம்....

- ந.விஜய செல்வம்

No comments:

Post a Comment