முதன்முதலாக
உனது விழி
கண்டேன்.
காணப் பெற்றேன்.
தூக்கம் தெளிந்தேன்.
உன்னுடன் உரையாடினேன்.
மொழிப் புலமை
பெற்றேன்.
உனது சுவாசம்
தீண்டப் பெற்றேன்.
மறு பிறவி எடுத்து
இவ்வுலகம் நுழைந்தேன்.
உனது குரலை
வளி வழி
கேட்டேன்!
தேனின் இனிமையைச்
செவியால்
சுவைத்தேன்.
உனது ‘முக’வரி
கண்டேன்.
எனது முகவரி
அறியப் பெற்றேன்.
உனது மூக்கின்
கூர்மை அறிந்தேன்.
தேக்கை பிளக்கும்
வலிமை உணர்ந்தேன்.
உனது கதிர் பார்வையைக்
கதிரவனும் கடன்
கேட்க விழைகிறேன்.
உனது பற்களின்
நிறம் கண்டேன்.
பசும் பால் வெளிர் மஞ்சள்
என விடை அளித்தேன்.
உனது மடியில்
துயில் கண்டேன்.
தலையணை என்ற
வார்த்தை மறந்தேன்.
உனது இதழின்
வடிவம் கண்டேன்.
வாழ்க்கையின் தத்துவம்
உணர்ந்தேன்.
உனது கூந்தல்
மணம் முகர்ந்தேன்.
சவ்வாதின் குறையைக்
கண்டுபிடிடத்தேன்.
உனது புருவத்தின்
வளைவு கண்டேன்.
கருப்பு வானவில்
காணக் கிடைத்தேன்.
உனது இமைகளின்
சிணுங்கலை ரசித்தேன்.
மி்ன்னலின் கால அளவை
எளிதில் கணித்தேன்.
இவ்வாறு...
பல்சுவைத் தேனைப்
பதமாகப் பரிமாறிய
உன்னை என்
'அம்மா' என்கிறேன்.
அன்பின் பண்பினை
நிறைவாகப் பெறுகிறேன்.
- ந.விஜய செல்வம்.
No comments:
Post a Comment