Saturday, January 16, 2010

ப‌டித்த‌தில் பிடித்த‌து...என் சகோதரிக்கு

முதிர்ந்த மழை நாளில்
தொலை காட்சி பார்ப்பவளை
தேநீர் கேட்டதற்காக
செல்லமாய் கோபிக்கும்
சிணுங்கலை ரசித்தது உண்டா நீ?

கூடபடிக்கும் கிராமத்து தோழியிடம்
'என் அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று
ஜாமண்ட்ரி பாக்ஸ் நிறைய
நாவல் பழம் வாங்கி வந்து
மண் உதிரா பழத்தை
ஊதி தரும் அன்பில்
உணர்ச்சி வசப்பட்டது உண்டா நீ...?

'என் அண்ணன்' என்றவள்
சக தோழிகளிடம்
அறிமுக படுத்தும்போது
வெட்கத்தால் மௌனித்து
தலை குனிந்து இருக்கிறாயா?

கிளி பச்சை என்றவள் ஆயிரம் முறை கூறியும்
பாசி கலரில் வளையல் வாங்கி வந்து
வசை பட்டு இருக்கிறாயா?

தென்னங் கீற்றுக்குள் சடங்கான வெட்கத்தில்
அவள் கன்னம் சிவக்கையில்
உனக்கும் அவளுக்கும் இடையே தோன்றிய
நுண்ணிய இழைகளை அறுத்தது உண்டா நீ?

மிக சாதாரணமாக கேட்டு விட்டாய் நண்பா...
'உனக்கென்ன அக்கா தங்கையா?
கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி தர ஒரே பையன்' என்று...
எனில் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிதர மட்டும் தான்
அக்கா தங்கையா?

நா.முத்துகுமார்( சில கேள்விகள்)

No comments:

Post a Comment