Saturday, January 16, 2010

பட்டுக் கவிதைகள்

ஒரு
சித்திரைப் பொங்கலன்று
கால் கொலுசுகளின் மெட்டுடன்
நெற்றியில் அம்மனின்
குங்குமப் பொட்டுடன்
உதடுகளில் என்னைப்
பாடும் பாட்டுடன்
பசும் பட்டு உடுத்தி
வரும் அழகர் போல்
அழகான
என் வாழ்வில்
பசுமை கூட்ட,
அழகாக
பச்சைப் பட்டுத் தாவணி
உடுத்தி வந்தாள்
அரசி அவள்....


ஒரு அழகான
செவ்வான
மாலை பொழுது...

திடீரென
கரும்
மேகங்களைக் கொண்டு
வெண்
மழை பொழிய
ஆரம்பித்தது.

காரணம்
என்னவெனில் அங்கே
வெண்
குடையுடன்
கரும்
பட்டு உடுத்தி
மழை வெள்ளம்
போல் வந்தாள்
செந்நிற
என் மழை
அரசி.

எங்கள் வீட்டில்
காதலுக்கு சம்மதம்
கிடைக்கவில்லை.
பின்னாளில்
கிடைத்தது.
என்னவென்று
என் பெற்றோரிடம்
கேட்டேன்.
'உன் கலையரசி
வெண்
பட்டில் வந்து
உங்கள் காதலுக்கு
கோரிக்கை விடுத்தது
கலை மகளே
வந்து கோரியது போல்
இருந்தது.
அதனால்'
என்றனர்.

-ந.விஜய செல்வம்

No comments:

Post a Comment