விவாதம் அப்படின்னா என்ன? அது எப்படி இருக்க வேண்டும்ணு தெரியணுமா? இந்தப்படத்தைப் பாருங்க. 96 நிமிட படத்துல, தொடர்ந்து 88 நிமிடம் ஒரு கோர்ட்டில் இருக்கற ஒரு அறையில் மட்டும். மொத்தம் 12 பேர் மட்டும் அந்த அறையில். ஒரு கொலை கேஸ் பத்தி விவாதிக்கறாங்க.. விவாதிக்கறாங்க.. விவாதிச்சுட்டே இருக்கறாங்க.. ஆனா, ரொம்ப subtitle படிக்கற மாதிரி இருக்கும்ணு நினைச்சுடாதீங்க. எளிமையான வசனங்கள். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இழுத்துச்செல்லும் படம்.
கதை என்ன? ஒரு 18 வயசுப்பையன் அவனோட அப்பாவையே கொன்னுட்டான்னு, கோர்ட்ல நிறுத்தி இருக்காங்க. நம்ம ஊர்லன்னா நீதிபதியே விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடுவாரு. ஆனா, அந்த ஊர்ல மக்கள் ஒவ்வொருத்தரும் வருஷத்துக்கு ஒரு தடவை கோர்ட்ல போயி, ஏதாவது ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்லணும். ஓட்டு போடற மாதிரி அதுவும் ஒரு கடமை. அதுக்கு ஆஃபீஸுல லீவு கூட குடுப்பாங்க. போக முடியாதுன்னா அபராதம் கட்டணும். சரி.. தனியா நாம் மட்டும் போயி ஏதாவது ஒரு தீர்ப்பு சொல்லிட முடியுமா? அதுனால, ஒரே வழக்குக்கு நிறைய பேரைக் கூப்பிடுவாங்க. நீதிபதி அவங்ககிட்ட வழக்கோட எல்லா விவரங்களையும் சொல்லுவார். அப்பறம் அவங்களை ஒரு அறையில தனியா விவாதிச்சு முடிவு எடுக்க சொல்லுவாங்க. ஆனா, எல்லாரும் ஒருமித்த தீர்ப்பை சொல்லணும். அதுவரை விவாதம் தொடரும்.
இந்தப்படத்துல அதுமாதிரி 12 பேரைக் கூப்பிடறாங்க. அவங்களுக்குள் யாரும் யாருக்கும் அறிமுகமானவங்க இல்ல. குற்றவாளியையும் இதுக்கு முன்னாடி தெரியாது. நீதிபதி சொல்லற ஆதாரங்களையும், குற்றவாளியோட வாக்குமூலத்தையும் கேட்டபின் ஒரு அறைக்கு 12 பேரை மட்டும் அனுப்பி வைக்கறாங்க. அவங்க முடிவு எடுக்க வேண்டியதுதான். 12 பேருல, 11 பேர் அந்தப்பையன்தான் குற்றவாளின்னு தீர்மானமா இருக்காங்க. ஒருத்தர் மட்டும் சாட்சிகள் பத்தாது, அதனால அந்தப்பையன் நிரபராதியா இருக்கலாம்னு சொல்றார். (அதாவது he has not done anything wrong legally அப்படிங்கறாரு – நன்றி:நித்தி). அதனால அவர் தன்னோட தீர்ப்பை மாத்தற வரையிலோ, இல்ல மீதி 11 பேரும் அவங்க தீர்ப்பை மாத்தற வரைக்குமோ அந்த அறையிலேயே இருந்து ஒருத்தரை ஒருத்தர் மாத்த முயற்சி செய்ய வேண்டியதுதான். இதெல்லாம் 10 நிமிடக்கதை.
இதுக்கப்பறம் என்ன பேசறாங்க அப்படிங்கறதுதான் படம்.
சரி.. 1948-ல் வந்த Rope படத்துலயே ஒரே வீட்டுக்குள்ளேயே 8 பேரை மட்டும் வச்சு படம் எடுத்துட்டாங்களே.. அதுக்கப்பறம் 10 வருஷம் கழிச்சு வந்த இந்தப்படத்துல அப்படி என்ன இருக்கு?
முதல் விஷயம் - கதாபாத்திரங்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். சாது, கோபக்காரர், அடிக்கடி கருத்து மாறுகிறவர், பிடிவாதமாக கருத்தை நம்பறவர், கசப்பான சொந்த அனுபவங்களால் முடிவெடுப்பவர் என சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கும் கதாபத்திரங்கள். 10 பேரு டீக்கடையில உட்கார்ந்துகிட்டு சூடான ஒரு விஷயத்தைப் பேசினா எப்படி இருக்குமோ அதை அப்படியே காட்டி இருக்காங்க.
இரண்டாவது விஷயம் - வசனம். முதல்வன் படத்துல அர்ஜுனும் ரகுவரனும் இன்டர்வியூ காட்சில பேசுவாங்களே. அந்த அஞ்சு நிமிஷத்துக்கே அசந்துட்டீங்கன்னா, இங்க 90 நிமிஷமும் அப்படித்தான். இயல்பான விறுவிறுப்பான வசனங்கள்.
மூன்றாவது – ஒவ்வொருவரும் மனம் மாறும் விதம். ஒவ்வொருவரையும் அவங்க கருத்து தப்புன்னு உணர வைப்பதையும், ஒரு விஷயத்தை எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் காண்கிறார்கள் என்பதையும் அப்படியே திரையில் கொண்டு வந்திருக்காங்க. (இந்தப்படம் வந்து 53 வருஷம் கழிச்சு தமிழில போன மாசம் வந்த ஒரு படத்தைப் பார்த்தேன். மூனு ஹீரோயின். எப்படித்தான் க்ளைமாக்ஸுல இப்படி திடீர்னு குணம் மாறுகிறாங்களோ.. அது டைரக்டருக்கே வெளிச்சம்)
AFI, IMDB மாதிரி சிறந்த திரைப்பட வரிசைகளில் முதல் 10 இடத்தில் உள்ளது!! மொத்தப்படமும் உங்களை நிச்சயம் இருக்கையில் கட்டிப்போடும்
(Thanks JAI for the Critics: http://worldmoviesintamil.blogspot.com/2010_03_01_archive.html
No comments:
Post a Comment