விளையாட்டாக பேருந்தில் உன்னைத்
திரும்பித் திரும்பிப் பார்த்தேன்....
விசை மி்கக் கொண்டு ஒரு
திங்களில் என் இதயம் புகுந்தாய்...
விவரம் அறியாத வயதில்
திருமணம் பற்றி சிந்தித்தேன்...
விக்கிரமாய் தெரிந்த உன்னைத்
திசைகள் எட்டிலும் கண்டேன்!
விஜய்க்கும் உனக்கும் உள்ள பொருத்தத்தில்
திருப்தி இல்லை காதல் கடவுளர்க்கு...
வினைப் பயன் என இதனைக் கருதி
திரும்பிப் பாராது நடக்கிறேன்.
வழக்கமாக
காதலர்கள் இறந்து
காதல் வாழும். ஆனால் இங்கு...
காதல் இறந்து
காதலி வாழ்கிறாள்.....
அவளைப் பார்க்கும்போதெல்லாம்
குற்ற உணர்வு!
கொலைக் குற்ற உணர்வு....???
ஆம்...!
நானும் கொலைகாரன்தான்....?
அவள் மீது கொண்ட
காதலைக்
கருணை இல்லாது
கொன்றதால்...
கொலைக் குற்றத்திற்குத்
தூக்கு தண்டனை.
என் மனதைக்
கொலை செய்த
உனக்கு
என்ன தண்டனை????
காதலியே...! மன்னிக்கவும்....
பெண்ணே....
என் காதலின் இறுதி ஊர்வலத்தில்
புன்னகைப் பூக்களை
புன்முறுவலுடன் வீசுகிறாயே! ஆனால்
இக்கல்லறைப் பூக்களின்
மணம் முகர
என் காதலுக்கு
இன்று உயிரில்லை!
நீ என்றும்
நீடூழி வாழ்க!
விதி
செ(சொ)ல்லும் வழியில்
செல்கிறேன்!
போய் வா(ராதே) மகளே!
- ந.விஜய செல்வம்
No comments:
Post a Comment