Saturday, February 27, 2010

கல்யாணத்துக்கு பெண் தேடறிங்களா??

"கல்யாணத்துக்கு பெண் தேடறிங்களா, இன்பா. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போங்கோ. சுவாமி முன்னாடி அமர்ந்து, இதில் இருக்கும் சுலோகங்களை படிங்கோ. சீக்கிரம் நல்ல பெண் கிடைப்பா " என்று எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்மணி சொன்னார். அவர் ஒரு வழக்கறிஞரும் கூட.

அவ்வாறு சொல்லி, அவர் எனக்கு தந்த புத்தகம் "ஹனுமான் சாலிசா".

"ஸ்ரீ குரு சரந ஸரோஜ ரஜ நிஜ மனு முகுரு ஸுதாரி
பரநஉ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி
புத்திஹீந தநு ஜாநிகே. ஸுமிரௌம் பவந குமார
பல புதி பித்யா தேஹு மோஹி ஹரஹீ கலேஸ பிகார "


என தொடங்குகிறது ஹனுமான் சாலிசா. இந்த வரிகளின் அர்த்தம், ஸ்ரீ குருவின் பாதாரவிந்தத்தில் இருக்கும் மகரந்த பொடிகளால் என் மனம் என்ற கண்ணாடியை தூய்மை ஆக்கி தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களைக் கொடுக்கும் என்பதாக படித்தேன். (பார்க்க :http://meerambika.blogspot.com/2007/03/intuition-2-1-2.html).

இதை இயற்றியவர் ஸ்ரீ துளசி தாசர் என்னும் ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர். இது ஒரு ஆஞ்சிநேயர் ஸ்துதி என்று கூறாமல் 'ஸித்த க்ரந்தம்' என்று அழைக்கிறார்கள் சமஸ்கிரதத்தில்.

ஹனுமான் சாலிசாவை காலையும், மாலையும் முழு நம்பிக்கையுடன் அனுமார் சந்நிதியில் அல்லது அவரது திருவுருவ படத்திற்கு முன்னால் சொன்னால் எல்லாவித காரியங்களும் நல்லவிதமாக நடக்கும், தடைகள் நீங்கும் என்று நான் கண்டு இருக்கிறேன் என்று சொன்னார் அவர்.

ஆனால், அந்த புத்தகத்தை,சுலோகங்களை நான் முழுமையாக படிக்கவில்லை. சிறிது நேரம் புரட்டிவிட்டு, மூடிவிட்டேன். அதன் பின், ஒரு சனிக்கிழமையில் என்னை சந்தித்த அந்த பெண்மணி, "நீங்க ஹனுமான் சாலிசாவை திறந்து கூட பார்க்கலைன்னு நினைக்கிறேன் " என்றார் பளிச்சென்று. நான் ஆம் என்று தலை ஆட்டியபோது, உடனே நங்கநல்லூர் கோவிலுக்கு அழைத்து சென்று, ஸ்ரீ அனுமார் சன்னதி முன்னர், ஹனுமான் சாலிசாவை படிக்க வைத்தார். அது நடந்த சில மாதங்களுக்கு பின், தற்போது, எனக்கு பெண் கிடைத்து விட்டார். ஹனுமான் சாலிசா படித்த பின், இப்படி எனக்கு நேர்ந்து இருக்கிறது.

நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கிறது என்பதை பல சமயங்களில், நம் அன்றாட வாழ்க்கை உணர்த்தி வருவதை, நீங்கள் உணர்ந்து இருக்கிறிர்களா நண்பர்களே?


-------நன்றி இன்பா : Courtesy: http://idlyvadai.blogspot.com/

No comments:

Post a Comment