Friday, December 10, 2010

சகோதரிக்கு ஒரு வாழ்த்து மடல்...


நி(கி)லா விடு தூது...

வடிவத்தை பார்த்தால் ஒரு வட்டம் தான்...
நிறத்தை பார்த்தால் ஒரு வெள்ளை தான்...
சூரிய வெளிச்சத்தில் இது ஒரு அற்பம் தான்...
கவிஞர்களுக்கு ஒரு காதல் பாடு பொருள் தான்...
விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆராய்ச்சி கூடம் தான்....
ஆனால்...
நமக்கு மட்டும் அது ஒரு உயிருள்ள இணையம்.

இன்டர்நெட் இருந்தால் என்ன? மொபைல் வந்தால் என்ன?
செயற்கை கோள் வேகம் என்ன?
எத்தனை இருந்தும்,
நான் எண்ணியவற்றை அன்புடனும் பாசத்துடனும்
என் தமக்கையுடன் சேர்ப்பது நிலா மட்டுமே...

'நிலா நிலா ஓடி வா' முதல்
'வா வா நிலவை புடிச்சி தரவா' வரை எவ்வளவோ நிலா பாடல்கள்...இவையெல்லாம்
நமக்கு உதவும் நிலவை வாழ்த்திப் பாராட்டி
கவிக்கோக்கள் எழுதிய நன்றி மடல்கள்..

கால சுழற்சியினால் தான்
தேய் பிறையோ வளர் பிறையோ...
ஆனால் என்றுமே நிலா நீ ஒன்றுதான்...
காலம் மாறினாலும், கரைகள் தூரமானாலும்
உன் துணையுடன் உரையாடுவோம்...

முழு பௌர்ணமி நாளில்..
ஒருவருக்கொருவர்
நலம் விசாரிக்க ...
நன்றி கூற....
சண்டை இட்டு கொள்ள....
சமாதானம் பேச...
சந்திரன் விடுகிறேன் தூது
என் தங்கைக்காக...

இனிய சகோதர சகோதரிகள் தினம்

- ந.விஜயசெல்வம்





No comments:

Post a Comment