
சச்சின பத்தி ஒரு கட்டுரை படிக்கும் போது பத்து வருடம் பின்னோக்கி சென்றது என் மனசு... இது நாங்க பத்தாவது படித்த போது நடந்த ஒரு சம்பவம்...எங்க ஊர்ல ஒவ்வொரு நடிகருக்கும் பிறந்த நாள் வரும் போது பெருசா ஒலிபெருக்கி வச்சு ஊரே அலறும்படி
ரெண்டு நாளைக்கு ரசிகர்கள் கொண்டாடுவாங்க....அப்போ சச்சின் பயங்கர பாப்புலர்...எங்களுக்கு சச்சினா உசிர் ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி மாதிரி....வெறித்தனமா இருப்போம்...ஏப்ரல் 24 சச்சின் பிறந்த நாள் வந்தது....எங்களுக்கு ஸ்கூல் போறதுக்கு குடுக்கிற காசெல்லாம் செத்து வச்சு நாங்க நண்பர்கள் எல்லாம் சேந்து அதே பாணியில் கொண்டாட முடிவு பண்ணினோம்...பணம் சேரல...பிறந்தநாள் நெருங்கி வந்துச்சு...
என்ன பண்றதுன்னு தெரில...கிரிக்கெட் வெளையாட வர்ற பெரிய அண்ணன்கள்கிட்ட கொஞ்சம் வாங்கினோம்...அப்பயும் சேரல,...வீட்ல உள்ள பழைய பேப்பர், உடஞ்ச பத்திரங்கள் எல்லாத்தையும் போட்டு கொஞ்சம் காசு செத்தோம்...ஒரு முப்பது ரூபா கம்மி...அப்போ முப்பது ரூபா ரொம்ப அதிகம் ஸ்கூல் போற பசங்களுக்கு...கிரிக்கெட் கிரௌண்ட் ல உள்ள முள் செடிகளை வெட்டி விறகா செத்து வித்துட்டோம்.....ரொம்ப சந்தோசம்...சச்சின் பிறந்த நாள் வந்துச்சு...ஓ சச்சின் வந்தாரய்யா பாட்டு அப்போ ரொம்ப பேமஸ்...எங்க வீட்டுக்கு பக்கத்துல்ல மெகா சைஸ் ஸ்பீக்கர், லவுட் ஸ்பீக்கர் வச்சு ரெண்டு நாள் ஒரே கொண்டாட்டம்...இனிப்பு பொங்கல் வைக்க முடில...ஒரு ரூபா சாக்லேட் வாங்கி நெறைய பேருக்கு குடுத்தோம்...சச்சின் பத்தி மைக் ல ஒரே புகழ் பாட்டுத்தான் என் நண்பர்கள்...என்னால் முழுமையா கொண்டாட முடில....சின்னம்மை வந்து வீட்டுக்குள்ள படுக்க வேண்டிதா போயிருச்சு...இருந்தாலும் நெனச்சத சாதிச்ச சந்தோசம்.....இது மாதிரி நெறைய உசிர்ங்க அவர்க்காக தவம் இருக்கிறாங்க...அதனால்தான் இன்னும் அவர் இன்னும் அசைக்க முடியாத சக்தியா இருக்கிறார்னு இப்போ நெனச்சுகிட்டேன்..
சந்தோஷ கண்ணீரே...
No comments:
Post a Comment