தண்ணீர் தேசத்தில் இருந்து...
****************************
ஆண் பெண்...
***********
ஆண் உடம்பில் ரத்தம் ஐந்தரை லிட்டர்
பெண் உடம்பில் ரத்தம் ஐந்து லிட்டர் என்ற
பேதம் இருந்தாலும்
செல்களின் செயல்கள் ஒன்றுதான்...
எனவே ஆணுக்கு தான் அதிக உரிமை...பெண்ணுக்கில்லை
என்ற பிற்போக்குத்தனத்திலிருந்து
வெளியே வாருங்கள்...
காதல் கடிதங்கள்...
****************
காதல் கடிதங்கள்..
உணர்ச்சியின் மத்தாப்புகளாய் இருப்பதுண்டே தவிர
உண்மையின் தீபங்களாக இருப்பது இல்லை...
ஒரு காதல் கடிதம் படிக்க படும் போதே
என்பது சதவீதம் கிழிக்க பட வேண்டும்....
மிச்சம் இருக்கும் இருபது சதவீதத்தில்
உணர்ச்சியின் வண்டலின் கீழே கொஞ்சம்
உண்மையும் உறைந்திருக்கும்...
உலகத்தில் காதல் கடிதங்கள் எல்லாம்
அழகானவை...
ஆனால் ஆரவாரமானவை....
நிலவில் ரத்தம் கசிவது போல...
மீசையோடு பிறந்த குழந்தை போல...
கவனம் ஈர்ப்பவை...
எதார்த்தம் மீறியவை...
--------------------------------------------------
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல
*******************************
அறிவாளியாய் இரு....
முட்டாளாய் நாடி...
கன்னகுழி அழகென்று புகழாதே..
அது
உன் சவகுழியாக இருக்கலாம்...
தும்மல்,காதல்
இரண்டையும்
வெட்கப்படாமல் வெளிப்படுத்து...
அடக்கினால்
வேண்டாத இடத்தில்
வெளிப்பட்டுவிடும்....
பயணமா?
பெட்டியிலும் வயிற்றிலும்
சிறிது இடம் இருக்கட்டும்....
பல் துலக்கும் போது
சீப்புக்கும் பல் துலக்கு...
தலையில் உள்ள மண்ணுக்கு
சாட்சி வேறு எதற்கு...?
------------------------------------------------
தமிழுக்கும் நிறம் உண்டு
**********************
பௌர்ணமி நிலவை பார்த்து கொண்டே
பாயை விரித்து படுக்க பிடிக்கும்...
எழுந்த பின்னே
போர்வைக்குள்ளே நுழைந்து
கொஞ்சம் தூங்க பிடிக்கும்
எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
இரவில் மட்டும் பாட பிடிக்கும்
பழைய பாடல்(ராஜா பாடல்) கேட்டு கொண்டே
படுக்கை மீது கிடக்க பிடிக்கும்..
நண்பர்கள் என்னை சுற்றி இருந்தால்
நரகம் கூட எனக்கு பிடிக்கும்...
நாளை என்பது வந்தால் வரட்டும்...
இந்த நிமிஷம் எனக்கு பிடிக்கும்....
கூட்டாஞ்சோறு சமைக்கும் போது குழந்தைகள்
சொல்லும் பொய்கள் பிடிக்கும்
பழக்கமில்லா பாவையர் சிந்தும்
பாதி சிரிப்பு பரவசம் பிடிக்கும்...
தனியாய் இருந்தால் பேச பிடிக்கும்...
சபையில் மௌனம் பிடிக்கும்...
எனக்கு பிடித்தது பிடிக்கும் என்ற
இதயங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும்...
--------------------------------------------
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல
*******************************
*பசித்தால் உணவு...
*படுத்தால் உறக்கம்...
*அடிக்கடி காதல் தோல்வி...
*மழை நாளில் சன்னல் ஓரம்...
*சேரிகள் இல்லாத இந்தியா
*மழிக்கவும் குளிக்கவும் அவகாசம்
*பெண்களின் சிரிப்பொலி
*எனக்கும் ஒரு காணி நிலம்
*கொடைக்கானல் அடிவாரத்தில் குடில்
*நனைவதற்கு சாரல்
*கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் எப்போதும் கவிதை மயக்கம்
*இளமைக்கு புதிய நண்பர்கள்
*முதுமைக்கு பழைய நண்பர்கள்
*நடுங்காத விரல்
*கடைசி வரைக்கும் சுகமாய் நீர் கழிக்கும் சுகம்
*உறக்கத்தில் உயிர் பிரியும் வரம்
கவிப்பேரரசு
No comments:
Post a Comment