இறைவா...
*********
* இறைவா...
நான் பாவம்
செய்கிறேன்...
அப்போதாவது
என்னை கவனிக்க மாட்டாயா? என்ற ஆசையில்
*இறைவன் படைக்க
விரும்பியதற்கு
காரணம் காதல்தான்
*கல்லிடம் கூட
கடவுளை காண்பவன்
மனிதனிடத்தில் காணமல் போவதேன்?
* இறைவா..
ஒவ்வோர் அழகும் உன்னிடம்
ஏறி வரும் படிகள்...
* பக்தியின் வெளிப்பாடு
பூசை ஆகாமல்
தொண்டு ஆகும்போது
இறைவன் தரிசனம் ஆகிறான்...
*இறைவா..
உன்னை காண ஆசை பட்டேன்...
கண்களையே திரை ஆக்கி விட்டாயே...
*இறைவா...
என் தேவைகளையெல்லாம் நிறைவேற்றிவிடாதே...
அப்புறம் உன்னை நான்
மறந்துவிடுவேன்....
*நாம் கடவுளை தேடுகிறோம்
கடவுள் நம்மை தேடி கொண்டு இருக்கிறார்...
*இறைவன் ஏன் ஒளிந்து இருக்கிறான்...
எதாவது குற்றம் செய்து இருப்பானோ?
*இறைவன் இசைக்கும் பாடலில்
பாவமும் ஒரு சுரம் தான்...
*இந்த காலத்தில்
வீடு கிடைப்பது
கஷ்டம் ஆகிவிட்டது
இறைவனுக்கும்....
-------------------------------------------------------
ஒரு தலை காதல்...
*******************
*உன்னை பார்க்கும் போதெல்லாம்
உளறுகிறேன்...
உலகம் அதை கவிதை என்கிறது...
*பிறர் இதயங்களில்
விருந்தாளியாகவே
தங்குகிராயே...காதலே...
உனக்கென்ன...வீடில்லையா?
*நான் உன்னருகில் இருக்கும் போது
என்னில் இருந்து தூரமாகவே இருக்கிறேன்...
*ரகசியத்தை காப்பாற்ற முடியாதவன்
கவிஞன்...
*புகைப்படம் ஏன் எடுக்கிறாய்...
ஒவ்வொரு இதயத்திலும் நீ வெவ்வேறு
ஓவியமாய் இருக்கிறாய்...
*மரணம்...
கனவுகளின் தொந்தரவு அற்ற தூக்கம்...
*மூளையின் தெருக்களில்
அலைந்து களைப்பு அடையும் போது
உன் நினைவு என்ற நிழலில்
இளைப்பாறுகிறேன்...
*மனம் அழுக்காகும் போதெல்லாம்
கவிதைகளில் நீரடுகிறேன்...
*காதல் தாகம்
கண்ணீர் குடித்தே அடங்கும்...
*உன்னை நேரில் கண்டால் கனவு
காண்கிறேன்..
கனவில் கண்டால் திடுக்கிட்டு
விழித்து கொள்கிறேன்....
* இசை கேட்டு வாழ்பவனுக்கு
புல்லாங்குழலின் வேதனை தெரியாது...
*உதடு கிடைக்காத புன்னகை நான்...
*உன் கண்ணை மீன்(கயல்) என்றார்கள்...
ஆனால்
அதுவோ வலை வீசுகிறது...
*உன்னால் எரிந்து போனவர்களின்
சாம்பலில் நீ கண் மை
தயாரிக்கிறாய்...
* என் எதிரில் நீயா..
இது கனவு எனில் நான் விழிக்க விரும்ப வில்லை...
இது நனவு எனில் நான் தூங்க விரும்ப வில்லை...
*பெண்
என்பவள் இலட்சியம் அல்ல...
வழிகாட்டி மரம்...
பலர்
அதன் அடியிலேயே
வசிக்க தொடங்கிவிடுகிறார்கள்...
* உன் நெற்றி பிறை பார்க்கும் போதெல்லாம்
நான் பண்டிகை கொண்டாடுகிறேன்
* பிரிவில் சந்திப்பின் ஏக்கம்
சந்திப்பில் பிரிவின் அச்சம்...
மனமே...உனக்கு
இரண்டிலும் நிம்மதி இல்லை...
* வீணைக்குள் சிறைப்பட்டு கிடக்கிறேன்...
உன் விரல்களை எதிர்பார்த்தபடி...
-------------------------------------------
--- கவிக்கோ (ரகசியப்பூ
No comments:
Post a Comment