தினம் நான் பல நிறங்களில் பௌர்ணமி காண்கிறேன்...
ஆமாம்...
உன் நெற்றியில் உள்ள பொட்டு தான்...
அது என்ன...
உனது நெற்றியில் மட்டும்
பூக்கள் பூக்கின்றன...
ஒ...
உனது பொட்டுகளின் வடிவங்களோ...
சிவனுக்கு மட்டுமா மூன்று கண்கள்...
பார்வதி தேவி போன்ற உனக்கும்
மூன்று கண்கள் தான்....
நீ பொட்டு வைத்து வரும் போது.....
ஒரு நாள் பொட்டு வாங்கி தந்தேன்...
குடையும் வேண்டும் என கேட்டாய்...
புரியாமல் முழித்தேன்....
உன் பொட்டு வைத்த நெற்றி
வெயில் மழையில் பட கூடாது என்றாய்...
கோவிலுக்கு நான் வரும் போது
நீதான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்றாய்...
ஏன் என்றேன்...
நெற்றி தொடும் அர்ச்சகர் கூட
நீயாக இருக்க வேண்டும் என்றாய்....
உன் வளையல் ஓசை கேட்டு
காலையில் விழிக்கும் நான்...
உன் செந்தூரம் பார்த்தே
சூரியனை காண்கிறேன்...அவ்வளவு பிரகாசம்...
திரு நீறு பூச வேண்டாம்...
தழும்பு வரும் என்றேன்...
நீ வைத்த பொட்டினை
அழியாமல் காப்பது இதுதான் என்றாய்...
நான் தினமும் கும்குமம் வைத்து விடுகிறேன்
என்பதற்காக....
கும்கும பூ கூட பாலில் கலந்து
குடிக்க கூடாது என்கிறாய்...
நான் வைக்கும் பொட்டின் மீது
அவ்வளவு காதலா....
நெற்றியில் முத்தம் தர
கூடாது என்கிறாய்...
ஒரு நாள் வீட்டில்
கும்குமம் தீர்ந்து விட்டது...
நாம் இருவரும் அறியவில்லை....
காலையில் குளித்தவுடன்
கும்குமம் வைத்தே ஆக வேண்டும் என
அடம் பிடித்தாய்...அழ ஆரம்பித்தாய்....
சமையலறையில்
மிளகாய் பொடி எடுத்து வந்து
நெற்றியில் வைக்க சொன்னாய்....
உன் அறியாத வெகுளி தனத்தை
நான் என்ன சொல்வது...
உன் இடது புருவம்
நெற்றியில் முடியும் இடத்தின் அருகில்
ஒரு மச்சம் இருந்தது
கடுகு அளவில்...
நான் வைத்து விடும் பொட்டு தவிர
வேறு எந்த சுவடும்
நெற்றியில் இருக்க கூடாது என கூறி
சிகிச்சை பெற்று
அதை மறைத்து விட்டாய்...
சிறு வயதில் என் சகோதரியிடம்
பொட்டு வைத்து விடு
என அடம் பிடிப்பேன்...
நீ பொட்டு வைக்க அடம் பிடிக்கும் போது
அந்த நினைவுகள் தான் வருகின்றன...
- ந. விஜய செல்வம்
அருமையான கவிதை வரிகள்
ReplyDelete