இந்நேரம் குளித்து முடித்து
திருப்பாவை சொல்வாளோ
வாயில் பிரஷுடன்
துவைக்கிற கல்லில் அமர்ந்து
கனவு காண்பாளோ
தம்பிக்கு அல்ஜிபிரா
சொல்லித் தருகிறாளோ
தங்கையோடு
தலையணை யுத்தம்
நடத்துகிறாளோ
எஃப்.எம். பாட்டோடு
பின்பாட்டுப் பாடுகிறாளோ
இன்னும் காலாட்டிக் கொண்டே
தூங்குகிறாளோ
என்ன செய்து கொண்டிருப்பாள்..?
தரகர் காட்டும்
போட்டோவில் இருக்கும் அவள்...
சாரு நிவேதிதா-வின் zero டிகிரி முன்னுரை-ஐ நினைவுப்படுத்துகிறது...நல்ல முயற்சி VJ !!
ReplyDeleteநன்றி கார்த்தி அவர்களே...முதல் கமெண்ட் உங்களோடதுதான்...
ReplyDelete