Tuesday, December 21, 2010

2010: சிறந்த 10 படங்கள்:

2010: நான் பார்த்ததில், எனக்கு பிடித்த சிறந்த 10 படங்கள்:
*********************************************************


1) நந்தலாலா - மிஷ்கினின் ஆக்கம் மற்றும் இளையராஜா எனும் ஹீரோயிசம். அன்பினை வித்தியாசமாக வெளிப்படுத்தியதற்காக....



2) இன்செப்ஷன்(Inception) - கனவு தொழிற்சாலை. மாஸ்டர்பீஸ்.படம் பார்த்த போது சில நேரம் நானும் கனவு காண ஆரம்பித்தேன்.நான் அனுபவித்த சில கனவுகளும் இருந்தன...(௨.ம் - நாற்காலியில் இருந்து விழும் காட்சி). படம் பார்த்த போது நிறைய காட்சிகளை உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. விக்கிபீடியா மற்றும் வலைபதிவர்கள் உதவியுடன் புரிந்து கொண்டலில் அவ்ளோ சந்தோசம் :-)




3) களவாணி - இது ஒரு பீல் குட் மூவி. அவ்வளவு சந்தோசம் இந்த படம் பார்த்தவுடன்.கதை இன்றி திரைக்கதையால் ரசிக்க வைக்க ஒரு உதாரணம்.



4) எந்திரன் - இது ஒரு ஷங்கர் படம். தலைவரை ரொம்ப நாளைக்கு பிறகு கொஞ்சம் நடிக்க வைத்ததற்கு ஷங்கருக்கு ஒரு ஷொட்டு. ரஹ்மான்,ஐஸ்,கிராபிக்ஸ் என ஒரு மகா தாண்டவம்.

5) Unstoppable - சில லாஜிக் மீறல் இருந்தாலும் சீட் நுனியில் உக்கார்ந்து ரசிக்க வைத்த படம். வாழ்க்கையை உணர வைத்த படம்.

6) மைனா - முதலில் அனைவரும் நன்றாக நடித்து இருந்தனர். மைனாவின் கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி. போக போக தெரியும். அற்புதமான திரைக்கதை, பசுமையான கேமரா. நல்ல முடிவாக இருந்து இருந்தால், களவாணி போல் இதுவும் மனதில் நிற்கும் படமாக இருந்து இருக்கும்.

7) விண்ணை தாண்டி வருவாயா - சிம்புவை நடிக்க வைத்த, திரிஷா இவ்ளோ அழகா? என எண்ண வைத்த , ரஹ்மானிடம் கைகோர்த்த - கௌதமிற்கு ஒரு பூங்கொத்து.

8) பாஸ் என்கிற பாஸ்கரன் - ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸா காமெடி பண்ணி எல்லோரையும் மகிழ வைத்த மற்றும் ஒரு நல்ல படம்.

9) மதராச பட்டிணம் - படம் பல படங்களின் கலவை என்றாலும் கலையும், திரைக்கதையும் நம்மை நாற்பதுகளுக்கு இழுத்து சென்றது மறுக்க முடியாத, மறக்க முடியாத உண்மை.

10) அங்காடி தெரு - நாம் பார்த்த ஒரு கடை தெருவின் அவல நிலையை ஒரு காதல் மூலமாக சொன்ன வசந்த பாலனுக்கு ஒரு வந்தனம். அந்த பெண்ணின் காலை உடைக்காமலே பாசிட்டிவாக முடித்து இருக்கலாம்.

பின் குறிப்பு: 8 தமிழ் படங்களில் 5 படங்கள் குடும்ப படங்கள்(1 - மாறன், 4 -ஸ்டாலின்)

Friday, December 10, 2010

திரும்பி பார்க்கிறேன்


சச்சின பத்தி ஒரு கட்டுரை படிக்கும் போது பத்து வருடம் பின்னோக்கி சென்றது என் மனசு... இது நாங்க பத்தாவது படித்த போது நடந்த ஒரு சம்பவம்...எங்க ஊர்ல ஒவ்வொரு நடிகருக்கும் பிறந்த நாள் வரும் போது பெருசா ஒலிபெருக்கி வச்சு ஊரே அலறும்படி
ரெண்டு நாளைக்கு ரசிகர்கள் கொண்டாடுவாங்க....அப்போ சச்சின் பயங்கர பாப்புலர்...எங்களுக்கு சச்சினா உசிர் ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி மாதிரி....வெறித்தனமா இருப்போம்...ஏப்ரல் 24 சச்சின் பிறந்த நாள் வந்தது....எங்களுக்கு ஸ்கூல் போறதுக்கு குடுக்கிற காசெல்லாம் செத்து வச்சு நாங்க நண்பர்கள் எல்லாம் சேந்து அதே பாணியில் கொண்டாட முடிவு பண்ணினோம்...பணம் சேரல...பிறந்தநாள் நெருங்கி வந்துச்சு...
என்ன பண்றதுன்னு தெரில...கிரிக்கெட் வெளையாட வர்ற பெரிய அண்ணன்கள்கிட்ட கொஞ்சம் வாங்கினோம்...அப்பயும் சேரல,...வீட்ல உள்ள பழைய பேப்பர், உடஞ்ச பத்திரங்கள் எல்லாத்தையும் போட்டு கொஞ்சம் காசு செத்தோம்...ஒரு முப்பது ரூபா கம்மி...அப்போ முப்பது ரூபா ரொம்ப அதிகம் ஸ்கூல் போற பசங்களுக்கு...கிரிக்கெட் கிரௌண்ட் ல உள்ள முள் செடிகளை வெட்டி விறகா செத்து வித்துட்டோம்.....ரொம்ப சந்தோசம்...சச்சின் பிறந்த நாள் வந்துச்சு...ஓ சச்சின் வந்தாரய்யா பாட்டு அப்போ ரொம்ப பேமஸ்...எங்க வீட்டுக்கு பக்கத்துல்ல மெகா சைஸ் ஸ்பீக்கர், லவுட் ஸ்பீக்கர் வச்சு ரெண்டு நாள் ஒரே கொண்டாட்டம்...இனிப்பு பொங்கல் வைக்க முடில...ஒரு ரூபா சாக்லேட் வாங்கி நெறைய பேருக்கு குடுத்தோம்...சச்சின் பத்தி மைக் ல ஒரே புகழ் பாட்டுத்தான் என் நண்பர்கள்...என்னால் முழுமையா கொண்டாட முடில....சின்னம்மை வந்து வீட்டுக்குள்ள படுக்க வேண்டிதா போயிருச்சு...இருந்தாலும் நெனச்சத சாதிச்ச சந்தோசம்.....இது மாதிரி நெறைய உசிர்ங்க அவர்க்காக தவம் இருக்கிறாங்க...அதனால்தான் இன்னும் அவர் இன்னும் அசைக்க முடியாத சக்தியா இருக்கிறார்னு இப்போ நெனச்சுகிட்டேன்..

சந்தோஷ கண்ணீரே...

திரும்பி பார்க்கிறேன்



இன்னிக்கு ஒரு நூறு....அம்பதாவது நூறுக்கு இன்னும் ரெண்டுதான் பாக்கி...அவர் 200 ரன் அடிச்ச அந்த நாள கொஞ்சம் திரும்பி பாத்தேன்...அது ஒரு புதன் கிழமை..நல்ல விண்டர் டே. காலைல எழுந்தவுடனே ஸ்கோர் பாத்தேன்...140 பக்கம் இருந்தார்...அப்புறம் வீட்ட விட்டு ஆபீஸ் கெளம்பும் போது பாத்தேன் ஒரு 170 அடிச்சு இருந்தார் ...ஒருக்கா மனசுக்குள்ள வேண்டிகிட்டேன் இன்னிக்கு சாத்தியபடனும்னு...பஸ்ல போகும்போது ஐ-போன் ல தான் ஸ்கோர் பாத்துக்கிட்டே போனோம்...அந்த 200 அடிச்ச தருணம் வந்த போது கிரிக் இன்போ வ ரெப்ரெஷ் பண்ணி பண்ணி சைட்டே ஹாங் ஆச்சு...ஒரே படபடப்பு....குளிர்லயும் வேர்த்தது.....அடிச்சிட்டார் அப்டின்னு டாக்டர் கார்த்தி சொல்லவும் ஒரே குதூகலம். பஸ்ல எல்லோருக்கும் கை கொடுத்து கொண்டாடினோம்.....கண்களில் ஒரு ஓரம் பனித்தது.....அழகான தருணம் அது......


சகோதரிக்கு ஒரு வாழ்த்து மடல்...


நி(கி)லா விடு தூது...

வடிவத்தை பார்த்தால் ஒரு வட்டம் தான்...
நிறத்தை பார்த்தால் ஒரு வெள்ளை தான்...
சூரிய வெளிச்சத்தில் இது ஒரு அற்பம் தான்...
கவிஞர்களுக்கு ஒரு காதல் பாடு பொருள் தான்...
விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆராய்ச்சி கூடம் தான்....
ஆனால்...
நமக்கு மட்டும் அது ஒரு உயிருள்ள இணையம்.

இன்டர்நெட் இருந்தால் என்ன? மொபைல் வந்தால் என்ன?
செயற்கை கோள் வேகம் என்ன?
எத்தனை இருந்தும்,
நான் எண்ணியவற்றை அன்புடனும் பாசத்துடனும்
என் தமக்கையுடன் சேர்ப்பது நிலா மட்டுமே...

'நிலா நிலா ஓடி வா' முதல்
'வா வா நிலவை புடிச்சி தரவா' வரை எவ்வளவோ நிலா பாடல்கள்...இவையெல்லாம்
நமக்கு உதவும் நிலவை வாழ்த்திப் பாராட்டி
கவிக்கோக்கள் எழுதிய நன்றி மடல்கள்..

கால சுழற்சியினால் தான்
தேய் பிறையோ வளர் பிறையோ...
ஆனால் என்றுமே நிலா நீ ஒன்றுதான்...
காலம் மாறினாலும், கரைகள் தூரமானாலும்
உன் துணையுடன் உரையாடுவோம்...

முழு பௌர்ணமி நாளில்..
ஒருவருக்கொருவர்
நலம் விசாரிக்க ...
நன்றி கூற....
சண்டை இட்டு கொள்ள....
சமாதானம் பேச...
சந்திரன் விடுகிறேன் தூது
என் தங்கைக்காக...

இனிய சகோதர சகோதரிகள் தினம்

- ந.விஜயசெல்வம்





மூளை : மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள முடிச்சு


மூளை...
************
உடம்பில் உள்ள உன்னத படைப்பான மூளையைப் பற்றி காரில் தனியாக I91 நெடுஞ்சாலையில் யோசித்து போய்கொண்டு இருந்தேன். என் தங்கை சொன்னது சரியாகத்தான் உள்ளது...
" டேய்...கார்ல போகும்போது எப்பவும் ஜாக்கிரதையா போ....பேசிகிட்டே,பாராக்கு பாத்துக்கிட்டே போகாத...உன்னையும் அறியாமலே உன் கண்ணும் காலும் மூளையும் தானாகவே முன்னாடி போகும் வண்டிய பாத்து பேசிக்கொள்ளும்...இது எல்லா டிரைவர்ஸ்க்கும் காமன் டா" அப்டின்னு சொன்னா...அது உண்மைதான்...கொஞ்சம் எக்ஸ்பீரியென்ஸ் வந்துட்டா, நம்மை அறியாமலே கார் ஓடுகிறது..ஓட்டப்படுகிறது....மூளை, கண்ணுக்கும் காலுக்கும் செய்திகளை ஒரு நொடியின் மில்லியனின் ஒரு பங்கு நேரத்தில் விரைவாக அனுப்புகிறது. அதே நேரத்தில், நமது காதை வைத்து இசையை ரசிக்க வைக்கிறது....இதயத்தையும் நம் நினைவுகளையும் பாடல் வரிகள் மூலமாக வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு செல்கிறது...வாய் ஏதோ முணுமுணுக்கிறது...நமது கை, கடிகார திசை, கடிகார எதிர் திசையில் சுழல்கிறது....வலது ஆட்காட்டி விரல் அவ்வப்போது அடிமூக்கிற்கும் மேலுதட்டுக்கும் இடையே கோலம் போடுகிறது...கார் போக வேண்டிய திசையில் பயணிக்கிறது" மூளை இல்லாதவன் ஏதோ கிறுக்குன மாதிரி இருக்கிறதா நீங்க நெனைச்சா உடனே ஓட்டுனர் உரிமம் பெற்று உங்கள் மூளையை பரிசோதனைக்கு உட்படுத்தலாம்..


tamil 3 Idiots: My Choice...

Here are my star cast selection for Tamil 3 idiots(Rascal)..Shankarji...consider this option also...

If Vijay is not the Hero, then my choices would be...

Surya - Amir Role

Arya - Maddy Role

Jiva - Sharman Role

Delhi Kumar or Nasser - Boman Irani Role

Santhanam - Chatur Ramalingam

Samantha(1st choice) or Kaajal - Kareena Role

Millimeter - Pakkoda from Pasanga

Replace Surya with Vijay as it is already finalized....Vijay'ah vachu intha padatha nenachu pakka mudila....

HoZ is my selection??

The sample of movie will be like this if Vijay acts...

எனக்கு பிடித்த படங்கள்: 12 Angry Men(1957)

விவாதம் அப்படின்னா என்ன? அது எப்படி இருக்க வேண்டும்ணு தெரியணுமா? இந்தப்படத்தைப் பாருங்க. 96 நிமிட படத்துல, தொடர்ந்து 88 நிமிடம் ஒரு கோர்ட்டில் இருக்கற ஒரு அறையில் மட்டும். மொத்தம் 12 பேர் மட்டும் அந்த அறையில். ஒரு கொலை கேஸ் பத்தி விவாதிக்கறாங்க.. விவாதிக்கறாங்க.. விவாதிச்சுட்டே இருக்கறாங்க.. ஆனா, ரொம்ப subtitle படிக்கற மாதிரி இருக்கும்ணு நினைச்சுடாதீங்க. எளிமையான வசனங்கள். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இழுத்துச்செல்லும் படம்.

கதை என்ன? ஒரு 18 வயசுப்பையன் அவனோட அப்பாவையே கொன்னுட்டான்னு, கோர்ட்ல நிறுத்தி இருக்காங்க. நம்ம ஊர்லன்னா நீதிபதியே விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடுவாரு. ஆனா, அந்த ஊர்ல மக்கள் ஒவ்வொருத்தரும் வருஷத்துக்கு ஒரு தடவை கோர்ட்ல போயி, ஏதாவது ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்லணும். ஓட்டு போடற மாதிரி அதுவும் ஒரு கடமை. அதுக்கு ஆஃபீஸுல லீவு கூட குடுப்பாங்க. போக முடியாதுன்னா அபராதம் கட்டணும். சரி.. தனியா நாம் மட்டும் போயி ஏதாவது ஒரு தீர்ப்பு சொல்லிட முடியுமா? அதுனால, ஒரே வழக்குக்கு நிறைய பேரைக் கூப்பிடுவாங்க. நீதிபதி அவங்ககிட்ட வழக்கோட எல்லா விவரங்களையும் சொல்லுவார். அப்பறம் அவங்களை ஒரு அறையில தனியா விவாதிச்சு முடிவு எடுக்க சொல்லுவாங்க. ஆனா, எல்லாரும் ஒருமித்த தீர்ப்பை சொல்லணும். அதுவரை விவாதம் தொடரும்.


இந்தப்படத்துல அதுமாதிரி 12 பேரைக் கூப்பிடறாங்க. அவங்களுக்குள் யாரும் யாருக்கும் அறிமுகமானவங்க இல்ல. குற்றவாளியையும் இதுக்கு முன்னாடி தெரியாது. நீதிபதி சொல்லற ஆதாரங்களையும், குற்றவாளியோட வாக்குமூலத்தையும் கேட்டபின் ஒரு அறைக்கு 12 பேரை மட்டும் அனுப்பி வைக்கறாங்க. அவங்க முடிவு எடுக்க வேண்டியதுதான். 12 பேருல, 11 பேர் அந்தப்பையன்தான் குற்றவாளின்னு தீர்மானமா இருக்காங்க. ஒருத்தர் மட்டும் சாட்சிகள் பத்தாது, அதனால அந்தப்பையன் நிரபராதியா இருக்கலாம்னு சொல்றார். (அதாவது he has not done anything wrong legally அப்படிங்கறாரு – நன்றி:நித்தி). அதனால அவர் தன்னோட தீர்ப்பை மாத்தற வரையிலோ, இல்ல மீதி 11 பேரும் அவங்க தீர்ப்பை மாத்தற வரைக்குமோ அந்த அறையிலேயே இருந்து ஒருத்தரை ஒருத்தர் மாத்த முயற்சி செய்ய வேண்டியதுதான். இதெல்லாம் 10 நிமிடக்கதை.
இதுக்கப்பறம் என்ன பேசறாங்க அப்படிங்கறதுதான் படம்.


சரி.. 1948-ல் வந்த Rope படத்துலயே ஒரே வீட்டுக்குள்ளேயே 8 பேரை மட்டும் வச்சு படம் எடுத்துட்டாங்களே.. அதுக்கப்பறம் 10 வருஷம் கழிச்சு வந்த இந்தப்படத்துல அப்படி என்ன இருக்கு?
முதல் விஷயம் - கதாபாத்திரங்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். சாது, கோபக்காரர், அடிக்கடி கருத்து மாறுகிறவர், பிடிவாதமாக கருத்தை நம்பறவர், கசப்பான சொந்த அனுபவங்களால் முடிவெடுப்பவர் என சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கும் கதாபத்திரங்கள். 10 பேரு டீக்கடையில உட்கார்ந்துகிட்டு சூடான ஒரு விஷயத்தைப் பேசினா எப்படி இருக்குமோ அதை அப்படியே காட்டி இருக்காங்க.
இரண்டாவது விஷயம் - வசனம். முதல்வன் படத்துல அர்ஜுனும் ரகுவரனும் இன்டர்வியூ காட்சில பேசுவாங்களே. அந்த அஞ்சு நிமிஷத்துக்கே அசந்துட்டீங்கன்னா, இங்க 90 நிமிஷமும் அப்படித்தான். இயல்பான விறுவிறுப்பான வசனங்கள்.
மூன்றாவது – ஒவ்வொருவரும் மனம் மாறும் விதம். ஒவ்வொருவரையும் அவங்க கருத்து தப்புன்னு உணர வைப்பதையும், ஒரு விஷயத்தை எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் காண்கிறார்கள் என்பதையும் அப்படியே திரையில் கொண்டு வந்திருக்காங்க. (இந்தப்படம் வந்து 53 வருஷம் கழிச்சு தமிழில போன மாசம் வந்த ஒரு படத்தைப் பார்த்தேன். மூனு ஹீரோயின். எப்படித்தான் க்ளைமாக்ஸுல இப்படி திடீர்னு குணம் மாறுகிறாங்களோ.. அது டைரக்டருக்கே வெளிச்சம்)
AFI, IMDB மாதிரி சிறந்த திரைப்பட வரிசைகளில் முதல் 10 இடத்தில் உள்ளது!! மொத்தப்படமும் உங்களை நிச்சயம் இருக்கையில் கட்டிப்போடும்

(Thanks JAI for the Critics: http://worldmoviesintamil.blogspot.com/2010_03_01_archive.html


Sep 5: Teachers Day: My Note...

Mary Esthar, Stella, Mary Sellathai, David, Irin, Ebenezer, Seeni Amma, Rajeswari, Amutha, Pathrakaali, Valli,Subramani,Vaitheeswaran,Selvaraani,Kalaivani,Maasanam,Somu,Lakshmi,Thamil ayya Tamil chelvan, Arumugam, PT Teacher, Master Marimuthu, Sivaguru Master, Rengamani,Sakthivel,Murugan,Amsa Kalyaani, Rajeswari, Lakshmi Shanmugam, Manivannan, PalaniGuru, Alagu, Thilagavathi, Celoshia, Rajaamani, Suganthi, Prasanna Jeyanthi, Ramamoothy, Vaikundam, Sabapathy,Mahendran,Rama,Kayalvizhi,Bhuvaneswari....." ..I could not remember all....But, BIG THANKS to ALL my Teachers who are also reason to pave my path.

MY benZ...

Whenever I sit in my driver seat, I am dreaming that I will surely see her couple of times before reaching the office...I am thinking the same when I am returning from office to Home...I am always seeing her as I think/dream but in different different color. She looks great in tan. Very good in white and black and always good in other colors. I always forget myself whenever I see her and always go behind her even if she goes slowly and I used to it. She never said don't follow me. Whenever I cross her, 1000W bulb is lightening in my heart and I want to go with her at least once. I hope, that will happen soon. I am praying for her. She is coming in different different classes and she is High class to me. She always holds three arrows in her round bindi in her forehead. She is awesome and fantabulous. I treat her as my Z and Her Name is Mercedes BenZ.


எனக்கு பிடித்த படங்கள்: Its a Wonderful Life(1946)

Its a Wonderful Life:(1946)

First of all thanks to Netflix for helping me to watch this wonderful movie....James Stewart...what a man you are! Wonderful is not a only word to describe this movie...A must watch by every1. The climax will surely well up your eyes. Certainly was I.

நாம் ஏன் வாழ வேண்டும் என காட்டும் படம். தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு, counseling தேவையே இல்லை. இந்த படத்தை ஒரு முறை பார்த்தால் போதும். இதைப்போல ஒரு மகிழ்ச்சியான ஒரு இறுதிக்காட்சி எந்தப்படத்திலும் இல்லை!

Watch it in Youtube...Its available...

Watch the trailer here:

Wednesday, December 8, 2010

2010 - 25 சிறந்த தமிழ் பாடல்கள்

2010 ல் தமிழில் வெளியான படங்களில் இருந்து எனக்கு பிடித்த 25 பாடல்கள்....இசைக்காக அல்லது காட்சி அமைப்புக்காக அல்லது பாடல் வரிகளுக்காக அல்லது பாடகர்கள் பாடிய விதத்திற்காக அல்லது நடன அமைப்புக்காக...

நந்தலாலா - ஒண்ணுக்கொண்ணு..
விண்ணை தாண்டி வருவாயா - மன்னிப்பாயா...
நாணயம் - நான் போகிறேன் ...
அங்காடி தெரு - அவள் அப்படி ஒன்றும்...
விண்ணை தாண்டி வருவாயா - அந்த நேரம் அந்தி நேரம்
எந்திரன் - கிளிமாஞ்சாரோ...
ஈசன் - கண்ணில் அன்பை...
இராவணன் - உசுரே போகுதே...
ஆயிரத்தில் ஒருவன் - ஓன் மேல ஆசதான்...
பையா - அடடா மழைடா...
இராவணன் - கள்வரே...
பாஸ் என்கிற பாஸ்கரன் - யார் இந்த பெண்தான்...
எந்திரன் - காதல் அணுக்கள்...
மதராசப்பட்டினம் - பூக்கள் பூக்கும் தருணம்...
மந்திர புன்னகை - என்ன குறையோ...
பாணா காத்தாடி - தாக்குதே...
மைனா - மைனா மைனா...
மந்திர புன்னகை - மேகம் வந்து போகும்...
நான் மகான் அல்ல - வா வா நிலவ புடிச்சு...
தமிழ் படம் - ஓ மக சீயா...
சிங்கம் - காதல் வந்தாலே...
கோவா - இதுவரை ...
வம்சம் - மருதாணி பூவப்போல...
அசல் - ஓ துஷ்யந்தா...
சுறா - நான் நடந்தால்...

TOP: