"கல்யாணத்துக்கு பெண் தேடறிங்களா, இன்பா. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போங்கோ. சுவாமி முன்னாடி அமர்ந்து, இதில் இருக்கும் சுலோகங்களை படிங்கோ. சீக்கிரம் நல்ல பெண் கிடைப்பா " என்று எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்மணி சொன்னார். அவர் ஒரு வழக்கறிஞரும் கூட.
அவ்வாறு சொல்லி, அவர் எனக்கு தந்த புத்தகம் "ஹனுமான் சாலிசா".
"ஸ்ரீ குரு சரந ஸரோஜ ரஜ நிஜ மனு முகுரு ஸுதாரி
பரநஉ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி
புத்திஹீந தநு ஜாநிகே. ஸுமிரௌம் பவந குமார
பல புதி பித்யா தேஹு மோஹி ஹரஹீ கலேஸ பிகார "
என தொடங்குகிறது ஹனுமான் சாலிசா. இந்த வரிகளின் அர்த்தம், ஸ்ரீ குருவின் பாதாரவிந்தத்தில் இருக்கும் மகரந்த பொடிகளால் என் மனம் என்ற கண்ணாடியை தூய்மை ஆக்கி தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களைக் கொடுக்கும் என்பதாக படித்தேன். (பார்க்க :http://meerambika.blogspot.com/2007/03/intuition-2-1-2.html).
இதை இயற்றியவர் ஸ்ரீ துளசி தாசர் என்னும் ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர். இது ஒரு ஆஞ்சிநேயர் ஸ்துதி என்று கூறாமல் 'ஸித்த க்ரந்தம்' என்று அழைக்கிறார்கள் சமஸ்கிரதத்தில்.
ஹனுமான் சாலிசாவை காலையும், மாலையும் முழு நம்பிக்கையுடன் அனுமார் சந்நிதியில் அல்லது அவரது திருவுருவ படத்திற்கு முன்னால் சொன்னால் எல்லாவித காரியங்களும் நல்லவிதமாக நடக்கும், தடைகள் நீங்கும் என்று நான் கண்டு இருக்கிறேன் என்று சொன்னார் அவர்.
ஆனால், அந்த புத்தகத்தை,சுலோகங்களை நான் முழுமையாக படிக்கவில்லை. சிறிது நேரம் புரட்டிவிட்டு, மூடிவிட்டேன். அதன் பின், ஒரு சனிக்கிழமையில் என்னை சந்தித்த அந்த பெண்மணி, "நீங்க ஹனுமான் சாலிசாவை திறந்து கூட பார்க்கலைன்னு நினைக்கிறேன் " என்றார் பளிச்சென்று. நான் ஆம் என்று தலை ஆட்டியபோது, உடனே நங்கநல்லூர் கோவிலுக்கு அழைத்து சென்று, ஸ்ரீ அனுமார் சன்னதி முன்னர், ஹனுமான் சாலிசாவை படிக்க வைத்தார். அது நடந்த சில மாதங்களுக்கு பின், தற்போது, எனக்கு பெண் கிடைத்து விட்டார். ஹனுமான் சாலிசா படித்த பின், இப்படி எனக்கு நேர்ந்து இருக்கிறது.
நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கிறது என்பதை பல சமயங்களில், நம் அன்றாட வாழ்க்கை உணர்த்தி வருவதை, நீங்கள் உணர்ந்து இருக்கிறிர்களா நண்பர்களே?
-------நன்றி இன்பா : Courtesy: http://idlyvadai.blogspot.com/
Saturday, February 27, 2010
Friday, February 26, 2010
விண்ணை தாண்டி வருவாயா என் விமர்சனம்
*********************************************************************
விண்ணை தாண்டி வருவாயா என் விமர்சனம்
**********************************************************************
* முதலில் மனோஜ்(ஒளிப்பதிவு)க்கு ஒரு ஷொட்டு. த்ரிஷா,கேரளா,மால்டா என அசத்திவிட்டார். கண்ணில் ஒட்டி கொண்டது...அவ்ளோ அழகு
* ரஹ்மான் சார். பின்னணி மற்றும் பாடல் அருமை.....கலர்ஸ் அருமை.
** சிம்பு(கார்த்திக்): அவ்ளோ முதிர்ச்சி நடிப்பில்.நீ விரல ஒளிச்சு வச்சுட்டு இந்த மாதிரி ஸ்கோப் உள்ள கேரக்டர்ல நடிப்பா.
*** த்ரிஷா(ஜெஸ்ஸி): அழகு சொல்ல வார்த்தை இல்லை. திரிஷாவா இது என சில இடங்களில் என்னையும் மறந்து ரசித்தேன்.திரிஷாவை இவ்ளோ அழகாக காட்டியதற்கு கௌதமிற்கு பாராட்டுக்கள். ஜெஸ்ஸி: குழப்பமான காதலி. காதல் என்பது என்னவென்று தெரியாமல் குழம்பி, பெரும்பாலான பெண்களின்(80%) குணத்தை கடைசியில் தெரிவித்தாள்.பயங்கர கோபம் ஜெஸ்ஸி மீது.
***கௌதம்: இறுதியில் மனதை அழு(த்)தும் காட்சி இருக்கும்..சில வினாடிகள் அது தூக்கி போடும் என்று படம் வரும் முன்னரே சொன்னார். உண்மைதான்.ஜெஸ்ஸி முதல் கல்யாணம் வேண்டாம் என வேறு அழுத்தமான காரணம் சொல்ல வைத்து இருந்தால் ஜெஸ்ஸி மீது மதிப்பு கூடி இருக்கும்...அதை கார்த்திக் மீது காதல் என்ற காரணம் என்று சொல்லி குழப்பமான காதலியின் மீது கடுங்கோபம் உண்டாக்க காரணம் இவர்தான்.
நளினி ஸ்ரீராம்: திரிஷாவின் அழகிற்கு ஒரு காரணம் இவர்தான். நன்றி நளினி. என்னோட கல்யாணத்துக்கு என் வைப் க்கு சாரி டிசைன் அண்ட் செலக்சன் நீங்கதான் பண்ணனும்.....அனைத்து உடைகளும் அவ்ளோ அருமை திரிஷாக்கு....
*** சில பிடித்த வசனங்கள் : "ஒப்பந்தம் என்பது உடைப்பதற்கே".."நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்" "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி னு சொல்லுதா?"
*** பிடிக்காதவை: ஒரே மாதிரியான வசனங்கள் பல தடவை சோர்வடைய வைக்கிறது...மிகவும் மெதுவான இரண்டாவது பாதி திரைக்கதை, அமெரிக்க ஜெஸ்ஸி..பாடல் ஒளிப்பதிவு: எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருந்த ஒரு சோர்வு.

Monday, February 15, 2010
விண்ணைத்தாண்டி வந்தாள்....
அய்யோ.. ஆறு மணிக்கு எந்திரிக்கணும்...
எந்த பஸ்ல போறது???
ஓட்ஸ தேடு...காலைலே சாப்ட மறக்காதடானு அம்மா சொல்லிருக்காங்க...
காலேல ஆபிஸ் போகும் முன்னாடி மெயில் எதுமே செக் பண்ணலயே...
பனி வேற சண்டக்காரன் மாதிரி மூஞ்சிலே அடிக்குது...
அம்முகிட்ட வேற பேசணுமே...இன்னிக்கு எத்ன மீட்டிங்னு தெரில...
மெயில் திறந்து பாத்தா ஒரே இஸ்ஸீயூசா இருக்கே...
பில்ல கட்டு...இல்ல மொபைல் கட்டுனு ஒரு எச்சரிக்கை மெசேஜ் வேறு...
அக்கா வேற கேக்குறா பொண்ணு யார் மாதிரி இருக்கணும்னு...
இப்டி ஏகப்பட்ட பிரஷர்ல திடீர்னு
ஒரு மின்னல் போன்ற புன்னகை என் மீது வீசியது...
எல்லாம் நம்ம த்ரிஷா தான்...என்னோட மொபைல்லருந்து...
விண்ணைத்தாண்டி வந்தாள்...
அக்கா.. கெளதம் பட ஹீரோயின் மாதிரி பொண்ணு இருந்தா
ஓகேனு சட்டுனு வெட்கப்பட்டு
போன் பண்ணாமலே சொல்லிட்டு
போன வச்சுட்டேன்..
-- AADMK(அகில அமெரிக்க திரிஷா முன்னேற்ற கழகம்)

Saturday, February 13, 2010
பசங்க பார்க்: காதல் கொண்டாட்டங்கள்
********************************************
பசங்க பார்க்: காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்:

காலை 6 மணி: வணக்கம் அமெரிக்கா : இதில் சிறப்பு விருந்தினராக த்ரிஷா கலந்து கொண்டு "விண்ணை தாண்டி வருவாயா...காதல் பூக்கள் தருவாயா..." பற்றி சுவையான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்: Jet Airways, Walmart
காலை 8 மணி: காதல் செய்திகள்.
காலை 8.30 முதல் 10 மணி வரை: காதல் மாலை - அனைத்து மொழிகளிலும் வெளியான சிறந்த காதல் பாடல்கள், படைப்புகள் ஒரு பார்வை. - வழங்குபவர் : காதல் இளவரசன் கணேசன் அவர்கள்.
நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்: 'DUNKIN DONUTS 60 Year celebration with Pasanga Park'
காலை 10 மணி : தற்காலத்தில் காதல் வளர பெரிதும் உதவுவது தகவல் தொடர்பு நுட்பமா? இல்லை புத்தகங்களா? - சந்தோஷ அடிகளார் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றம்.
நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'BIG Y'
காலை 11.30 மணிக்கு : அமெரிக்க தொலைகாட்சிகளில் முதல் முறையாக: சிறப்பு லொள்ளு சபா: " தமிழ் படம்"
நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'IBM'
மதியம் 2 மணிக்கு: பசங்க பவன் சிறப்பு பதார்த்தம்: காதல் ரசம் செய்வது எப்படி? வழங்குபவர்: 'அம்மா'.
நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'PRIYA RESTAURANT','TACO BELL'
மாலை 3 மணிக்கு: காதல் கசக்குதையா : ஒரு வித்தியாசமான கலந்துரையாடல்.
நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'OLD NAVY','SONY Products' and 'NBA'
மாலை 4 மணிக்கு: சிறப்பு திரைப்படம்: 'மை நேம் இஸ் கான்' .
நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்:'WINDOWS 7','APPLE Products'
இரவு 8.30 மணிக்கு: காதல்...காதல்...காதல்...காதல் போயின் காதல்....ஒரு கலையரங்கம்....காதல் பாடல்களுக்கு: இசை, நடனம், நாடக வடிவில் ஒரு வித்தியாச முயற்சி.... தலைமை: ' மாஸ்டர்' தீபக்ஜி.
நிகழ்ச்சியை உடன் வழங்குபவர்: 'HARD ROCK CAFE'
பசங்க பார்க்கின் காதல் தின நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாருங்கள்...அடுத்த நாள் அலுவலக வேலையை பாருங்கள்....

Subscribe to:
Posts (Atom)