***********************************************
மன்னிப்பாயா...ஒரு தாலாட்டு....
***********************************************
விண்ணை தாண்டி வருவாயா ஆடியோ ரிலீஸ் பண்ணின நாளில் இருந்து தினமும் தூங்கும் போது கேட்கிறேன் இந்த பாடலை...
முதல் காரணம் என் ஆத்ம தங்க தலைவி ஸ்ரேயா கோஷல். முதலில் ஒரு சிறு வருத்தம் என்னடா ரஹ்மான் போய் இந்த பாட்டுக்குனு...
கேட்க கேட்க முதல்ல வரிகள் ரொம்ப பிடிச்சது...இந்த பாடல் தான் ஜெஸ்ஸியோட குணம்....இந்த படம்....
உன் குரல்வளையில் அப்படி என்ன இருக்கு ஸ்ரேயா...பாட்ட கேட்ட இரண்டொரு நிமிடங்களில் நித்திராதேவி என்னை ஆட்கொண்டுவிடுகிறாள்....அப்டி ஒரு மயக்கம் வருகிறது....பட்டாம்பூச்சி பறக்கிறது வயிற்றுக்குள்...நெஞ்சு பட படக்கிறது...முழுசா சொல்ல தெரில... கண்களில் கண்ணீர் வருகிறது... உங்க யாருக்காவது அப்டி இருந்திருக்கா?
.இதுக்கு முன்னாடி "கண்ணில் காணும்...(நான் கடவுள்)" "முன்பே வா...(ஜில்லுனு ஒரு காதல்)", "அந்த நாள் ஞாபகம்...(அது ஒரு கனா காலம்)" "உன்ன விட..(விருமாண்டி)" மூலமாகதான் தான் பாடாய் படுத்தினாய்...
லதா, ஆஷா, சுசீலா,ஜானகி, சித்ரா பத்தியெல்லாம் கேள்வி பட்டு இருக்கேன்...இவங்க கிட்ட மத்தவங்க உணர்ந்த அந்த இனிமையான குரலை நான் உன் குரலில் கேட்கிறேன்..... இசை மற்றும் பாடல்கள் உன் மூலம் பெருமை அடைகின்றன...
ஒண்ணு மட்டும் நிச்சயம்...இந்த பாடலில் ஒரு வரி வரும்...'அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்...எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்" அப்டின்னு...அது நிச்சயம் ஸ்ரேயா.... என் தலையணை தினமும் நனைக்கப்படுகிறது உன் குரல் கேட்டு....
திருக்குறள் சேர்த்து என்னை திருக்குறள் புத்தகத்தை திருப்பி பார்க்க வைத்த தாமரை மற்றும் கௌதமிற்கு நன்றி...
ரஹ்மான் சார்...அது என்ன வெளிச்சம் என்னும் சொல்லை அப்டி ஒய்யாரமாக,அழகாக உச்சரிச்சு இருக்கீங்க...எனக்கு ஒரு செகண்ட் ல புல்லரிச்சு போச்சு...ஆவ்சம் சார்....
நன்றி ரஹ்மான், தாமரை,ஸ்ரேயா மற்றும் கௌதம் அவர்களே..